தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?
விடாமுயற்சி திரைப்படம் வெளியான 15 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.150 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்கவில்லை என்பதால் வசூல் ரீதியாக படம் தோல்வியை தழுவியுள்ளது. வெளியான முதல் இரண்டு நாட்களுக்கு படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்து வந்தது. அதன்பிறகு அதிகமாக எதிர்மறையான விமர்சனங்கள் தான் வந்தது.
இதன் காரணமாக படத்தை பார்க்க திரையரங்குகளில் செல்வோர்களின் எண்ணிக்கையும் குறைய வசூலும் குறைந்தது. கிட்டத்தட்ட 220 கோடிக்கும் அதிகமான செலவு செய்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 150 லிருந்த்து 160 கோடிகள் வரை தான் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இன்னும் வசூல் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் கூட நம்பத்தக்க சினிமா வட்டாரங்களில் இருந்து இவ்வளவு தான் வசூல் செய்துள்ளதாக கூறுகிறார்கள்.
படம் வெளியாவதற்கு முன்பு படம் பெரிய வெற்றிபெறும் என எதிர்பார்த்து காத்திருந்த தயாரிப்பு நிறுவனமான லைக்காவுக்கு இது ஒரு அதிர்ச்சியான விஷயமாகவும் சொல்லப்படுகிறது. இன்னும் ஒரு சில திரையரங்குகளில் படம் ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில், படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்பதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
அதன்படி, விடாமுயற்சி திரைப்படம் வரும் வருகின்ற மார்ச் மாதம் 3-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே ஒரு படங்கள் திரையரங்குகளில் வெளியாகிறது என்றால் சரியாக 1 மாதங்கள் அல்லது அதற்கு பிறகு தான் ஓடிடி தளத்தில் வெளியாகும்.
ஆனால், விடாமுயற்சி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 1 மாதங்கள் கூட ஆகவில்லை அதற்கு முன்னதாகவே ஓடிடியில் வெளியாகவிருக்கிறது. பிப்ரவரி 6-ஆம் தேதி விடாமுயற்சி திரையரங்குகளில் வெளியான நிலையில், ஓடிடியில் மார்ச் 3 ரிலீஸ் ஆகவிருக்கிறது. 25 நாட்களில் படம் ஓடிடிக்கு வந்த காரணமே படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை என்பது தான் எனவும் சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்பட்டு வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!
February 24, 2025
NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..
February 24, 2025
தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?
February 24, 2025
தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா?
February 24, 2025