தியேட்டர்களில் வெறிச்சோடி…ஓடிடிக்கு வரும் விடாமுயற்சி! எப்போது தெரியுமா?
அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் முதல் வாரத்தில் உலகம் முழுவதும் ரூ.150 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள் வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த அளவுக்கு வசூல் செய்யுமா? என்கிற கேள்விகளும் எழுந்திருக்கிறது. ஏனென்றால், படத்திற்கு கிடைத்து வந்த வரவேற்பு குறைந்த காரணத்தால் வசூலும் குறைந்துள்ளது. முன்னதாக வெளியான 4 நாட்களில் படம் உலகம் முழுவதும் ரூ.120 கோடி வரை வசூல் செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
அதனைத்தொடர்ந்து தற்போது வெளியான ஒரு வாரத்தில் படம் எவ்வளவு கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, விடாமுயற்சி திரைப்படம் வெளியான 1 வாரத்தில் உலகம் முழுவதும் ரூ.150 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த தகவலை பாக்ஸ் ஆபிஸ் தகவலை தெரிவிக்கும் ரமேஷ் பாலா தெரிவித்துள்ளார்.
படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டு இருப்பதால் திரையரங்குகளுக்கு செல்போர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. எனவே, படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். இந்த சூழலில், அதற்கான தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, விடாமுயற்சி படத்தின் ஓடிடி உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. படத்திற்கு எதிர்பார்த்த அளவுக்கு விமர்சனங்கள் வரவில்லை என்ற காரணத்தால் விரைவாக ஓடிடியில் வெளியாகுமா? என்கிற கேள்விகள் எழுந்தது.
ஆனால், நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் அடுத்த மாதம் தான் வெளியிட திட்டமிட்டு இருக்கிறதாம். படம் கடந்த பிப்வரி 6-ஆம் தேதி தான் திரையரங்குகளில் வெளியானது. எனவே, இன்னும் படம் வெளியாகி ஒரு மாதங்கள் கூட ஆகவில்லை என்பதால் அடுத்த மாதம் (மார்ச்) 7-ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியீட நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025