இதுதான் ஒரிஜினல் சம்பவம்.. தெறிக்கும் அஜித் வசனங்கள்…GBU ஃபர்ஸ்ட் சிங்கிள் இதோ!

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த குட் பேட் அக்லி படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

OGSambavam OUT NOW

சென்னை : அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக மாஸ் கம்பேக் கொடுக்கும் நோக்கத்தில் அஜித் குட் பேட் அக்லி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி பலத்த வரவேற்பை பெற்று தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான டீசர்களில் 24 மணி நேரத்தில் அதிகம் பார்வையாளர்களை கடந்த சாதனையை படைத்திருந்தது. எனவே, இந்த படத்தின் மீது தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமா அளவுக்கு எதிர்பார்ப்புகள் எழுந்திருக்கிறது.

படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை புஷ்பா படங்களை தயாரித்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து இருப்பதன் காரணமாக வரும் நாட்களில் தீவிரமாக படத்தின் ப்ரோமோஷன் பணிகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக தான் இன்று படத்தின் முதல் பாடலான OG Sambavam என்கிற பாடல் வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே பாடலுக்கான ப்ரோமோ வெளியாகி இருந்த நிலையில் பாடல் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தது. எனவே, பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலை விஷ்ணு எடவன் எழுத இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து பாடியிருக்கிறார். அவருடன் இணைந்து ஆதிக் ரவிசந்திரன் சில வார்த்தைகள் பாடியுள்ளார். அதைப்போல அஜித் பேசும் வசனங்களும் பாடலில் இடம்பெற்றுள்ளது.

ரசிகர்கள் கூறும் விமர்சனங்கள்

பாடலை கேட்டுவிட்டு ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் பாடல் நன்றாக இருக்கிறது. கதையுடன் நகரும் பாடலாக இருக்கும் என நினைக்கிறேன். எனவும், பாடலை விட பாடலில் அஜித் பேசும் வசனங்கள் தான் மாஸாக இருக்கிறது எனவும் ரசிகர்கள் தங்களுடைய விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 16042025
Nayinar Nagendran
CM Break fast Scheme
china donald trump
Nainar Nagendran - R.S. Bharathi
rain news today
Nellai Iruttukadai Halwa shop