தாக்கத்தை ஏற்படுத்திய விடுதலை 2! முதல் நாள் வசூல் எவ்வளவு?

விடுதலை 2 திரைப்படம் வெளியான முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 6.6 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

viduthalai 2

சென்னை : இயக்குநர் வெற்றிமாறன் ஆடுகளம் படத்தில் நாங்க பன்னா தரமா இருக்கும் ஊருக்கே தெரியும் என்ற வசனத்தை வைத்திருப்பார். அந்த வசனம் அவருக்கும் பொருந்தும் என்றே சொல்லலாம். ஏனென்றால், அந்த அளவுக்கு தொடர்ச்சியாக தமிழ் சினிமாவுக்கு தரமான படைப்புகளை கொடுத்து வருகிறார். கடைசியாக விடுதலை 1 திரைப்படத்தை கொடுத்து இருந்த நிலையில், அடுத்ததாக விடுதலை 2 என்ற படைப்பை கொடுத்திருக்கிறார்.

படம் வெளியான முதல் நாளிலே இந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துமா? என்கிற அளவுக்கு படம் பார்த்த பலரும் இன்னும் விடுதலை காட்டிற்குள் இருந்து வெளியே வரவில்லை என்று தான் சொல்லவேண்டும். அந்த அளவுக்கு அழுத்தமான கதைக்களத்தையும், வசனத்தையும் இயக்குனர் வெற்றிமாறன் இந்த படத்தின் மூலம் கொடுத்திருக்கிறார்.

படம் வெளியாவதற்கு முன்பே படத்தின் மீது அதிகமான எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில், படத்திற்கான டிக்கெட் புக்கிங் அமோகமாக நடந்தது. எனவே, படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதைப்போலவே நல்ல ஓப்பனிங் கிடைத்திருக்கிறது. அதன்படி, படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 7 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

படங்களின் பாக்ஸ் ஆபிஸ் தொடர்பான செய்திகளை வெளியிடும் சாக்னிக் இணையத்தளம் வெளியிட்ட தகவலின் படி, விடுதலை 2 திரைப்படம் வெளியான முதல் நாளில் தமிழகத்தில் 6.6 கோடி வசூல் செய்துள்ளதாகவும், தெலுங்கில். 4 லட்சம் வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருவதால் வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news
Germany 2 Dead
Heinrich Klaasen
viduthalai 2
kovi chezhiyan
Zia ur Rehman
rain