வந்தாச்சு விடாமுயற்சி அப்டேட்! முதல் பாடல் இந்த தேதியில் தான் வெளியீடு!
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு விடாமுயற்சி படத்திற்கான முதல் பாடல் எப்போது வெளியாகும் என்பதற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது.
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். ஏனென்றால் அந்த அளவுக்கு படத்தினை பற்றி அப்டேட்டுகளை வெளியிடாமல் சஸ்பென்சாகவே வைத்துக்கொண்டிருந்தார்கள். எனவே, படத்தில் என்ன தான் இருக்கிறது என்று படத்தின் மீது அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற நடிகர்களின் ரசிகர்கள் கூட எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர்.
ஏற்கனவே, படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுவிட்டது. அத்துடன் படத்தின் டீசரும் வெளியாகி படத்தின் மீது இருந்த எதிர்பார்பை அதிகப்படுத்தி இருந்தது. இந்த சூழலில், அதற்கு அடுத்த அப்டேட்டாக படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகும் என்பதற்கான விவரம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இன்று கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு விடாமுயற்சி படத்தின் முதல்பாடலான Sawadeeka என்ற பாடல் வரும் 27ம் தேதி மதியம் 1 மணிக்கு வெளியாகும் என்கிற அறிவிப்பு வெளிவந்துள்ளது. த்ரிஷா -அஜித் இருவரும் இந்த போஸ்டரில் இருப்பதால் ஒரு குத்து பாடலாக இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் என்ற காரணத்தால் பாடல் எப்படி இருக்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு சற்று கூடுதலாக உள்ளது என்றும் சொல்லலாம்.
இதற்கு முன்பு அனிருத் அஜித் படத்திற்கு இசையமைத்திருந்த வேதாளம் படத்தில் இடம்பெற்ற ஆலூமா டோலுமா பாடல் பெரிய வெற்றியை பெற்று இன்று வரை பலருடைய பேவரைட் பாடலாக இருந்து வருகிறது. அந்த மாதிரி இந்த பாடலும் இருக்கவேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்தது வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Wishing everyone a Merry Christmas 🎄✨ from team VIDAAMUYARCHI 🤗 The 1st single #Sawadeeka ❤️ is releasing this Friday, 27th Dec at 1PM 🕐 Straight from our heart to your playlist! 🥰🎶#Vidaamuyarchi #EffortsNeverFail#AjithKumar #MagizhThirumeni @LycaProductions #Subaskaran… pic.twitter.com/oSvzu7DynM
— Suresh Chandra (@SureshChandraa) December 25, 2024