போஸ்டர் அடி…அண்ணன் ரெடி..! வெறித்தனமாக வெளியானது லியோ படத்தின் ‘நா ரெடி’ பாடல்..!

LeoFirstSingle

நடிகர் விஜய் இன்று தனது 49-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இன்று அவர் நடித்து வரும் லியோ படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

முன்னதாக, படத்தின் முதல் பாடலான ‘நா ரெடி’ பாடலுக்கான ப்ரோமோ வீடியோ நேற்று வெளியிடபட்டது. அதனை தொடர்ந்து இன்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் 12 மணிக்கே வெளியிடப்பட்டது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் மிகவும் கெத்தான லுக்கில் இருக்கிறார்.

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதை தொடர்ந்து, தற்பொழுது ‘நா ரெடி’ பாடல் வெளியாகி உள்ளது. இன்று விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல் வெளியானது ரசிகர்களுக்கு 2 ட்ரீட்டாக அமைந்துள்ளது.

லியோ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும், விஜய் நடித்துள்ள இந்த லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்