ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் உலகம் முழுவதும் 543 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
பதான்
இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் தீபிகா படுகோன்,ஜான் ஆபிரகாம், அசுதோஷ் ராணா, டிம்பிள் கபாடியா ஆகியோர் நடிப்பில் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “பதான்”.
அதிரடி ஆக்ஷன்-த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 4 ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது என்பதால் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள்.
பதான் வசூல்
பதான் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதன்படி, படம் வெளியான 5 நாட்களில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்பதை படத்தின் தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
அதன்படி, பதான் திரைப்படம் உலகம் முழுவதும் 543 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் 335 கோடி வசூல் செய்துள்ளதாக யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
பதான் வெற்றி கொண்டாட்டம்
பதான் திரைப்படம் உலகம் முழுவதும் 543 கோடி வசூலை கடந்து மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில், நேற்று வெற்றிவிழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் ஷாருக்கான், தீபீகா படுகோன் என படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டார்கள்.
விழாவில் பேசிய ஷாருக்கான் “பதான் திரைப்படம் 100 கோடி, 200 கோடி, 500 கோடி, வசூல் என்று பலரும் கூறுகிறார்கள். என்னை பொறுத்தவரை எனக்கு அதெல்லாம் முக்கியமே இல்லை உங்களோட அன்புதான் எல்லாம். எங்களோட படங்களைப் பார்த்து நீங்க ரசிச்சா போதும். அதுதான் நீங்க எங்க மேல காட்டும் அன்பு. அதுவே எங்களுக்கு போதுமானது” என நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
மும்பை: நடிகர் சைஃப் அலிகான் மீதான தாக்குதல் தொடர்பாக மும்பை போலீசார் 20 குழுக்களை அமைத்து குற்றவாளியை தீவிரமாக தேடி…
ஆந்திரா: திருச்சியை சேர்ந்த 40 பேர் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்பொழுது, சித்தூர்…
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. இன்று தான் கடைசிநாளாகும். இந்நிலையில், திமுக வேட்பாளர்…
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும். காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு…
டெல்லி: ஐ.பி.எல். பாணியில் நடத்தப்படும் மகளிர் பிரீமியர் லீக் 2025-ன் மூன்றாவது 20 ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டி பிப்ரவரி…
சென்னை: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் இரவு முழுவதும் போராடியும்…