மாமன்னன் திரைப்படத்துக்கு தடை இல்லை – சென்னை உய்ரநீதிமன்றம் அதிரடி.!

மாமன்னன் படத்துக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் நாளை வெளியாகிறது. இந்த நிலையில், ஓஎஸ்டி பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், படத்துக்கு தடை இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்த்துளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஏஞ்சல் என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமான உதயநிதி, அத்திரைப்படத்தில் முழுவதும் நடித்துக் கொடுப்பதற்குள் மாமன்னன் திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டார். மேலும் இது தனக்கு கடைசி படம் எனவும் அமைச்சரான பிறகு உதயநிதி தெரிவித்தார்.
இதனையடுத்து, ஓடிஎஸ் படத்தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ராம சரவணன், தனது படம் அப்படியே கிடப்பில் போய்விடுமோ என்று அஞ்சி, ஏஞ்சல் திரைப்படம் 80% சதவீதம் முடிந்துள்ளது, மீதமுள்ள 20% சதவீத பணியும் முடித்துக்கொடுக்குமாறும் சென்னை உயர்நீதிமன்றத்தில், மாமன்னன் படத்தை தடை செய்யக்கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு கடந்த 23ம் தேதி நீதிபதி குமரேஷ் பாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வரும் ஜூன் 28க்குள் உதயநிதி, மற்றும் ரெட் ஜெயன்ட்ஸ் நிறுவனமும் பதில் விளக்கம் தருமாறு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், மாமன்னன் திரைப்படத்துக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025
சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து! வெளியேறிய பாக், வங்.,அணிகள்.!
February 25, 2025
NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025