புது புது முயற்சி விடாமுயற்சி! அசத்தல் அப்டேட் கொடுத்த அனிருத்!
விடாமுயற்சி முதல் பாடல் நாளை வெளியாகவுள்ள நிலையில், பாடல் குறித்து இசையமைப்பாளர் அனிருத் அசத்தலான அப்டேட்டை கொடுத்துள்ளார்.
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள “விடாமுற்சி” படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் சூழலில், இப்போதே படத்தின் ப்ரோமோஷன் பணிகளை தொடங்கினால் தான் சரியாக இருக்கும் என அதற்கான வேலைகளில் படக்குழு இறங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக கிறிஸ்துமஸ் தினத்தன்று ஸ்விட் எடு கொண்டாடு என்கிற வகையில், விடாமுயற்சி படத்தின் முதல் பாடல் வரும் 27-ஆம் தேதி மதியம் 1 மணிக்கு வெளியாகும் என்கிற அறிவிப்பு வெளிவந்திருந்தது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு அனிருத் + அஜித் இந்த படத்தின் மூலம் இணைந்த காரணத்தால் பாடல் எப்படி இருக்கப்போகிறது என்ற ஒரு எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு மத்தியில் எழுந்திருக்கிறது.
இந்த சூழலில், 27-ஆம் தேதி வெளியாகவிருக்கும் விடாமுயற்சி படத்தின் முதல் பாடலான “Sawadeeka Sawadeeka” பாடலை எந்த பாடகர் பாடியிருக்கிறார்? எந்த எழுத்தாளர் பாடலை எழுதியிருக்கிறார் என்பதற்கான விவரத்தை அனிருத் தற்போது கொடுத்து பாடலின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை இன்னுமே அதிகப்படுத்தியுள்ளார்.
அதன்படி, விடாமுயற்சி முதல் பாடலை யண்டி புள்ள, யாரென்ன சொன்னாலும், குச்சி மிட்டாய், கட்டிகிட உள்ளிட்ட பாடல்களை பாடி நம்மளை கவர்ந்த ஆண்டனி தாசன் தான் பாடியுள்ளார். இந்த பாடலை பாடலசிரியர் தெருக்குறள் அறிவு எழுதியுள்ளதாகவும் அனிருத் அசத்தலான அப்டேட்டை கொடுத்துள்ளார். அவருடைய வரிகளில் அவர் குரலில் அனிருத் பாடலில் இசை என்றால் கேட்கவே ஒரு புது முயற்சியாக இருக்கிறது. எனவே, பாடல் எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
#Sawadeeka sawadeeka.. trip-ah tripping ka.. trip-ah tripping ka..
Sawadeeka sawadeeka.. yakka kapunkaa.. yakka kapunkaa 🕺💃#Vidaamuyarchi single from 1pm tomo 🎉🎉🎉AK sir ⚡️⚡️⚡️ #MagizhThirumeni 🤗🤗🤗
🎤 ‘Folk Marley’ @anthonydaasan
🖋️ @Arivubeing— Anirudh Ravichander (@anirudhofficial) December 26, 2024