kushi - kick File Image]
கோலிவுட்டில் ஒவ்வொரு வாரமும் திரைப்படங்கள் வெளியாகிறது. இருப்பினும், சில வாரங்கள் திரைப்பட வெளியீடுகள் இல்லாமல் இருக்கிறது. அந்த வகையில், இந்த வார வெள்ளிக்கிழமை நாளை (செப்டம்பர் 1ம் தேதி) வெளியாகும் ஆறு தமிழ்ப் படங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
நாளை (31.08.2023) ஒரே நாளில் சந்தானத்தின் கிக், விஜய் தேவரகொண்டாவின் குஷி, யோகி பாபுவின் லக்கிமேன், பாரதிராஜாவின் கருமேகங்கள் கலைகின்றன, பரம்பொருள், ரங்கோலி ஆகிய 6 திரைப்படங்கள் ஒன்றாக களமிறங்குகிறது.
கிக்
கடந்த மாதம் வெளியான ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ மிகப்பெரிய வெற்றியை கண்டுள்ளதால் ‘கிக்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பிரசாந்த் ராஜ் இயக்கத்தில், சந்தானம், தன்யா ஹோப் மற்றும் பிரம்மானந்தம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ‘கிக்’ திரைப்படம் நகைச்சுவை பொழுதுபோக்கு படமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஷி
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ‘குஷி’ திரைப்படம், படத்தின் தமிழ் பதிப்பும் நாளை ஒரே நேரத்தில் வெளியாகிறது. ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் காதல் கலந்த கதையாக இருக்கும் என கூறப்படுகிறது. தயாரிப்பாளர்கள் தங்கள் விளம்பரங்களுடன் படத்தை தமிழ்நாட்டில் பிரமாண்டமாக வெளியிட திமிட்டுள்ளனர்.
பரம்பொருள்
பரம்பொருள் படத்தில் அமிதாஷ், ஆர். சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அரவிந்த் ராஜ் எழுதி இயக்கியிருக்கும் ‘பரம்பொருள்’ க்ரைம் த்ரில்லராக அமைந்துள்ளது. மேலும், படத்தின் டீசர் மற்றும் டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
கருமேகங்கள் கலைகின்றன
தங்கர் பச்சான் இயக்கத்தில், பாரதிராஜா, அதிதி பாலன், கவுதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு, சாரல், மகானா சஞ்சீவி ஆகியோர் நடித்திருக்கும் இந்த திரைப்படம் அப்பாவுக்கும் மகனுக்கும் இடையிலான படமாக இது இருக்கும். பாரதி ராஜா மற்றும் கௌதம் மேனன் தந்தை மற்றும் மகனாக நடித்துள்ளனர். இதுமுன் இல்லாத இந்த காம்போ படத்திற்கான எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.
லக்கிமேன்
தொடர்ந்து துணை வேடங்களில் நடித்து வந்த யோகி பாபு, இப்பொது, திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் உருவாகும் ‘லக்கிமேன்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் வீரா, ரைச்சல் ரபேக்கா, அப்துல் லீ மற்றும் ஆர்.எஸ். சிவாஜி ஆகியோரும் நடிக்கின்றனர், இப்படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
ரங்கோலி
வாலி மோகன் தாஸ் இயக்கிய ‘ரங்கோலி’ படத்தில் ஹமாரேஷ், முருகதாஸ், பிரார்த்தனா, அமித் பார்கவ், சஞ்சய், ரகுல், விஷ்வா, அக்ஷயா ஹரிஹரன், கிருத்திகா, சாய் ஸ்ரீ உள்ளிட்ட புதுமுகங்கள் நடித்துள்ளனர். இது ஒரு பள்ளி பருவ திரைப்படமாக இருக்கும், மேலும் படத்தின் கதை இரண்டு பள்ளி மாணவர்கள் குழுவிற்கு இடையே நடக்கும் மோதலைப் பற்றியதாக கூறப்படுகிறது.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…