விக்ரம் வசூலை முறியடிக்குமா ‘GOAT’! தமிழகத்தில் எத்தனை கோடி தெரியுமா?

GOAT படம் தமிழகத்தில் மட்டும் வெளியான 11 நாட்களில் 180 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

vikram vs goat

சென்னை : கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் தமிழகத்தின் வசூல் சாதனையை விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள GOAT படம் முறியடிக்குமா? என்கிற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. விக்ரம் திரைப்படம் மொத்தமாக உலகம் முழுவதும் 425 கோடி வரை வசூல் செய்திருந்தது. அதைப்போல, தமிழகத்தில் மட்டும் 200 கோடி வரை வசூல் செய்திருந்தது.

இந்த நிலையில், GOAT படம் வெளியான இரண்டு வாரங்களில் தமிழகத்தில் மட்டும் 180 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்னும் சில நாட்களில் 20 கோடி வசூல் செய்து விக்ரம் படத்தின் தமிழக வசூல் சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தமாக 400 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட GOAT படம் வெளியான சில நாட்களிலே படத்தினுடைய பட்ஜெட் செலவை வசூலில் ஈட்டியுள்ளது. அதன்படி, இதுவரை உலகம் முழுவதும் 450 கோடிகள் வரை வசூல் செய்து தயாரிப்பாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. GOAT படம் பல கோடிகள் வசூல் செய்துள்ள காரணத்தால் படக்குழு வெற்றியை கொண்டாடி வருகிறார்கள்.

GOAT படம் மொத்தமாக, 450 கோடி வசூல் செய்த நிலையில், தமிழ் சினிமாவில் அதிகம் வசூல் செய்த 5 -வது திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது. 4-வது இடத்தில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இருக்கிறது. அந்த வசூல் சாதனையை GOAT முறியடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்