தளபதி 68 படத்தின் தலைப்பு இதுதானா..? தீயாய் பரவும் புதிய தகவல்.!!
நடிகர் விஜய் தற்போது தனது 67-வது படமான லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
அந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இந்நிலையில், இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பே இன்னும் தொடங்கவில்லை, அதற்குள் படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள், படத்தின் தலைப்பு என்னவென்பதற்கான தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில், தற்போது தளபதி 68 படத்திற்கான தலைப்பு குறித்த ஒரு தகவல் பரவி வருகிறது. அது என்னவென்றால், இந்த தளபதி 68 படத்திற்கு தலைப்பு CSK-என வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய்யும், வெங்கட் பிரபுவும் தீவிர சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் எனவே, இந்த CSK எனும் தலைப்பை அவர்கள் படத்திற்கு வைக்க வாய்ப்புகள் அதிகம் என்கிறது கோலிவுட் வட்டாரம். இந்த தகவல் உண்மையானதாக இருந்தால் வரும் ஜூன் 22-ஆம் தேதி தளபதி 68 பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் தலைப்பு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்டுகிறது.
Speculation is rife that the highly anticipated #Thalapathy68, helmed by #VenkatPrabhu, might be titled #CSK???? If true, brace yourselves for an explosive storm of fans’ enthusiasm ???????????? Moreover, if the title holds, we could witness an intriguing connection to VP’s iconic… pic.twitter.com/p3o3W7KMAv
— KARTHIK DP (@dp_karthik) June 4, 2023