“நான் ஆணையிட்டால் “…சாட்டையுடன் விஜய்! ஜனநாயகன் படத்தின் அடுத்த போஸ்டர்!

விஜய் நடித்துவரும் ஜனநாயகன் திரைப்படத்திற்கான இரண்டாம் லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

JanaNayaganSecondLook

சென்னை :  விஜயின் கடைசி திரைப்படத்தினை இயக்குநர் எச்.வினோத் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு அரசியல் பயணத்தில் ஈடுபடுவதாகவும் இனிமேல் சினிமாவில் நடிக்கமாட்டேன் எனவும் விஜய் ஏற்கனவே அறிவித்திருந்தார். எனவே, அவருடைய கடைசி படம் எந்த மாதிரி இருக்க போகிறது என்கிற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்துள்ளனர்.

முன்னதாகவே, விஜய் அரசியல் பயணத்தில் இறங்கவுள்ள காரணத்தால் கண்டிப்பாக கடைசி படத்தில் அரசியல் சார்ந்த விஷயங்கள் அதிகமாக இருக்கும் என கூறப்பட்டு கொண்டு இருந்தது. அதனை உறுதிப்படுத்தும் வகையில், எச்.வினோத்தும் கொஞ்சம் அரசியல் படத்தில் இருக்கும் என யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுக்கும்போது  கூறியிருந்தார்.

இப்போது அதனை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தும் வகையில் இன்று காலை இந்த படத்தின் தலைப்பு பர்ஸ்ட்லுக் போஸ்டருடன் படக்குழு வெளியீட்டு இருந்தது. அதன்படி, விஜயின் 69-வது படத்திற்கு “ஜனநாயகன்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நெய்வேலியில் ரசிகர்களுக்கு மத்தியில் எடுத்த செல்ஃபி பாணியிலான புகைப்படத்தை போல பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரெடி செய்யப்பட்டிருந்தது.

அதில் ரசிகர்கள் விஜயை பார்த்து தங்களுடைய அன்பை வெளிப்படுத்தி இருந்தார்கள். ஆனால், இந்த போஸ்டரில் விஜய் தொண்டர்களாக கீழே மக்கள் அவரை பார்த்து அவருக்கு ஆதரவு தெரிவிப்பது போல காட்டப்பட்டு இருந்தது. எனவே, இது அரசியல் கதையம்சம் கொண்ட படம் என்பது உறுதியும் ஆகிவிட்டது. பர்ஸ்ட் லுக் போஸ்டரை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது லுக் போஸ்டரும் இன்று வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இரண்டாம் லுக் போஸ்டரும் தற்போது வெளியாகியுள்ளது. போஸ்டரில் விஜய் கையில் சட்டை ஒன்றை வைத்து கொண்டு இருக்கிறார். அதில் நான் ஆணையிட்டால் என்ற வசனமும் எழுதப்பட்டுள்ளது. இது எம்.ஜி.ஆருடைய படத்தின் பெயர். படத்திலும் அவர் கையில் ட்டை ஒன்றை வைத்து இருப்பார். எனவே, அதைப்போலவே விஜய்யும் நின்று கொண்டு போஸ் கொடுத்துள்ளார். எனவே, படம் கண்டிப்பாக ஒரு அழுத்தமான அரசியலை பேசப்போகிறது என தெரிகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

LIVE UPDATE
udhayanidhi stalin vijay Magizh Thirumeni
GSLV-F15 -ISRO
Vengavayal
CivilRights
Professor Arunan
gold price