கிங்ஸ்டன் திரைப்படம் எப்படி இருக்கு? நெட்டிசன்கள் சொல்லும் விமர்சனங்கள் இதோ!

ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள கிங்ஸ்டன் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

Kingston Review

சென்னை : ஒரு பக்கம் இசையமைப்பாளராகவும் மற்றொரு பக்கம் நடிகராகவும் கலக்கி கொண்டு இருப்பவர் ஜிவி பிரகாஷ். இதுவரை லோக்கலான மற்றும் ஜாலியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்த ஜிவி இந்த முறை வித்தியாசமாக இதுவரை கையில் எடுக்காத அதிரடியான கதாபாத்திரத்தை எடுத்து கிங்ஸ்டன் படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்த படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். அப்படி படம் பார்த்துவிட்டு நெட்டிசன்கள் தெரிவித்துள்ள விமர்சனங்கள் பற்றி பார்ப்போம்.

படத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர் ” கிங்ஸ்டன் திரைப்படம் உண்மையில் நன்றாக இருக்கிறது. படத்தில் ஜிவி பிரகாஷின் நடிப்பு மற்றும் படத்தின் இசை அருமையாக இருக்கிறது. படத்தில் வரும் கடல் காட்சிகள் உண்மையில் அருமையாக இருக்கிறது” என கூறியுள்ளார்.

படத்தை பார்த்த மற்றொருவர் ” கிங்ஸ்டன் படம் மிகவும் நன்றாக இருக்கிறது. நடிகராகவும், இசையமைப்பாளராகவும் அவர் தன்னுடைய வேலையை முழுவதுமாக படத்திற்காக கொடுத்திருக்கிறார். எழுத்துபிழையில் சில பிரச்சினைகள் இருந்தாலும் படம் பார்க்க நன்றாக இருக்கிறது” என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்