கேம்சேஞ்சர் பட பாடல்களுக்கு மட்டும் எத்தனை கோடிகள் செலவு தெரியுமா?

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள கேம்சேஞ்சர் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

shankar game changer

சென்னை : வழக்கமாகவே படங்களில் வரும் காட்சிகளை மட்டும் பிரமாண்டமாக எடுக்காமல் படத்தில் இடம்பெறும் பாடல்களையும் பிரமாண்டமாக எடுப்பவர் தான் பிரம்மாண்டத்திற்கு மறுபெயரான  சம்பவகாரார் இயக்குநர் ஷங்கர். இதுவரை இவர் இயக்கிய படங்களின் பாடல்கள் இன்று வரை பலருடைய பேவரைட்டாக இருந்து வருகிறது. பாடல்கள் மட்டுமில்லை..படங்களும் கூட தான்.

ஆனால், யானைக்கும் அடி சறுக்கும் என்கிற வகையில், இந்தியன் 2 திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தோல்வியை சந்தித்தது. அந்த விமர்சனங்களுக்கு இந்தியன் 3 படம் பதில் சொல்லும் என்கிற வகையில், படம் கண்டிப்பாக திரையரங்குகளில் தான் வெளியாகும் என்பதையும் இயக்குநர் ஷங்கர் கூறியிருந்தார்.

இதற்கிடையில், அவருடைய இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் தெலுங்கில் உருவாகியுள்ள கேம்சேஞ்சர் திரைப்படம் வரும் ஜனவரி 10-ஆம் தேதி தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

படம் வெளியாவதற்கு முன்பே படத்தில் இருந்து சில பாடல்கள் வெளியாகிவிட்டது. இருப்பினும் வழக்கமாக ஷங்கர் படங்களின் பாடல்களுக்கு கிடைக்கும் வரவேற்புக்கு குறைவான வரவேற்பு தான் கிடைத்துள்ளது என்று சொல்லவேண்டும். இந்நிலையில், படத்தின் பட்ஜெட் 450 கோடி ரூபாய் அதில் படத்தில் இடம்பெற்ற 5 பாடல்களை எடுப்பதற்காக ஷங்கர் எவ்வளவு கோடி செலவு செய்துள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

அதன்படி, கேம்சேஞ்சரில் 5 பாடல்களை படமாக்க இயக்குனர் ஷங்கர் 92 கோடி செலவு செய்துள்ளார்.  எனவே, இவ்வளவு செலவு செய்து பாடல்கள் எடுக்கப்பட்டுள்ள காரணத்தால் வீடியோவாக தியேட்டரில் பார்க்கும்போது இன்னும் பிரமிப்பாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்