காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!

ரியோ நடிப்பில் வெளியாகியுள்ள ஸ்வீட்ஹார்ட் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

SweetHeart twitter review

சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர் அடுத்ததாக ஸ்வீட்ஹார்ட் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளர். இந்த திரைப்படத்தினை ஸ்வைனீத் எஸ். சுகுமார் என்பவர் இயக்கியுள்ளார். படத்தினை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்து இசையமைக்கவும் செய்திருக்கிறார். இந்த படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, படத்தின் டிரைலர் வெளியாகி காதல் கலந்த எமோஷனலான படமாக இந்த படம் இருக்கும் என எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருந்தது. எனவே, இன்று வெளியாகி அதே போலவே படம் இருந்த காரணத்தால் படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. படம் பார்த்த மக்கள் பலரும் படம் குறை சொல்லமுடியாத அளவுக்கு இருப்பதாகவே தெரிவித்து வருகிறார்கள். அதைப்போல, படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் பலரும் டிவிட்டரில் தங்களுடைய விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். அவர்கள் கூறியுள்ள விமர்சனங்களை பற்றி பார்ப்போம்.

படத்தை பார்த்த ஒருவர் ” ஸ்வீட்ஹார்ட் திரைப்படம் பார்க்க காதல் கலந்த நகைச்சுவை படமாக இருக்கிறது. படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி இன்னும் எமோஷனலாக இருந்தது. இன்றுவரை சிறந்த படைப்பு.. அவர் ஒரு சிறந்த முன்னணி நடிகராக உயர்ந்து வருவது படத்தின் மூலம் தெரிகிறது. யுவன் சங்கர் ராஜாவின் இசையும் அருமையாக உள்ளது. இளைஞர்களை ஈர்க்கும் ஒரு காதல் நகைச்சுவை படமாக இந்த படம் இருக்கும்” என பதிவிட்டுள்ளார்.

படத்தை பார்த்த மற்றொருவர் ” படம் அற்புதமான கதைக்களம் மற்றும் திரைக்கதையை கொண்டுள்ளது. ரியோ ராஜ் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தில் யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை அருமையாக இருக்கிறது” எனவும் கூறியுள்ளார்.

படத்தை பார்த்த மற்றொருவர் ” படம் மக்களுடைய மனதை வென்றுள்ளது. உணர்ச்சிப்பூர்வமான காட்சிகள் படத்தில் நிறையவே இருக்கிறது. ரியோ ராஜ் அதில் அருமையாக நடித்துள்ளார். படத்தில் இசையமைப்பாளர் யுவன் இசை தூணாக இருந்துள்ளது” எனவும் பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்