கோட் படத்தை மிஞ்சியதா குட் பேட் அக்லி? முதல் நாள் வசூல் விவரம் இதோ
அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 28 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை : பொதுவாகவே அஜித் படங்கள் வெளியானால் அந்த படம் விஜயின் படங்களின் வசூல் சாதனையை முறியடிக்குமா என்பது ஒரு போட்டியாகவே இருக்கும். அப்படி தான் தற்போது அஜித் நடிப்பில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வரும் குட் பேட் அக்லி வெளியான முதல் நாளில் இதற்கு முன்பு விஜய் நடிப்பில் வெளியாக கோட் படத்தின் முதல் நாள் வசூலை முறியடித்துள்ளதா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளது.
இதனையடுத்து, இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை என்கிற காரணத்தால் குட் பேட் அக்லி திரைப்படம் எவ்வளவு கோடி வசூல் செய்துள்ளது என்கிற தகவல் வெளியாகவில்லை. இருப்பினும், செய்தி நிறுவனங்கள் வாயிலாக வெளியான தகவலின் படி, கோட் படத்தின் தமிழக முதல் நாள் வசூலை அஜித்தின் குட் பேட் அக்லி படம் முந்திவிட்டதாக தகவல்களை தெரிவித்து வருகிறார்கள்.
அதன்படி, குட் பேட் அக்லி தமிழகத்தில் மட்டும் வெளியான முதல் நாளில் 28 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படம் வெளியான முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 21 கோடிகள் வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது உலகம் முழுவதும் எவ்வளவு வசூல் செய்திருந்தது என அறிவிக்கப்பட்டிருந்தாலும் தமிழகத்தில் எவ்வளவு வசூல் செய்திருந்தது என்பதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை.
எனவே, தகவல்களின் அடிப்படையில் குட் பேட் அக்லி கோட் படத்தின் தமிழக முதல் நாள் வசூலை முறியடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதே சமயம் கோட் படம் உலகம் முழுவதும் 126 கோடி முதல் நாளில் வசூல் செய்திருந்த நிலையில், குட் பேட் அக்லி திரைப்படம் முதல் நாளில் 50 கோடிகளுக்கு மேல் தான் வசூல் செய்துள்ளது எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.