இனிமே டான்ஸர் டா… சூர்யாவுடன் இணைந்து குத்தாட்டம் போட்ட சனா..ரெட்ரோ பாடல் இதோ!
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ரோ படத்தின் இரண்டாவது பாடலான கனிமா பாடல் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ளது.

சென்னை : கார்த்திக் சுப்புராஜ் படம் என்றாலே அவருடைய படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் இசை எப்படி வரும் என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அந்த அளவுக்கு எமோஷனல் வேணுமா..எமோஷனல் இருக்கு..குத்து பாடல் வேணுமா அதுவும் இருக்கு எனஎதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யா தவறாமல் அவருடைய படங்களுக்கு ஸ்பெஷல் பாடலை சந்தோஷ் நாராயணன் கொடுத்துக்கொண்டு வருகிறார். அப்படி தான் அவர் தற்போது சூர்யா நடித்து வரும் ரெட்ரோ படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.
ஏற்கனவே, இந்த படத்தில் இருந்து வெளியான கண்ணாடி பூவே பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று பலரும் முணுமுணுத்து கொண்டு இருக்கிறார்கள். அந்த பாடலின் காய்ச்சல் குறையாத நிலையில் அடுத்ததாக அதற்கு அடுத்த பாடலான கனிமா என்கிற பாடலை சந்தோஷ் நாராயணன் இறக்கிவிட்டிருக்கிறார். இந்த பாடல் 90ஸ் காலகட்டத்தில் நடந்த கல்யாண வீடுகளில் நடனம் ஆடினால் எப்படி இருக்கோமோ அதே பீலில் இசையமைத்திருக்கிறார்.
பாடலின் இசையை கேட்கும்போது 90 ஸ் காலகட்டத்தில் வந்த பாடல்களுக்கு இசையமைக்க பயன்படுத்தப்பட்ட கருவிகளை வைத்து இசையமைத்துள்ளது தெரிகிறது. இந்த பாடலை எழுத்தாளர் விவேக் எழுத இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனே பாடியுள்ளார். பாடல் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் என்றால் பாடலில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் இணைந்து நடனம் ஆடியுள்ளார்.
பாடலில் கடைசியாக வரும் பகுதிகளில் சூர்யா மற்றும் பூஜா சந்தோஷ் நாராயணன் நடனம் ஆடியிருப்பது ரீல்ஸ்களில் நிச்சயமாக ட்ரெண்ட் ஆகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாடலை கேட்ட ரசிகர்கள் பாடல் அருமையாக இருக்கிறது என்று கூறியதை விட சந்தோஷ் நாராயணன் நடனம் தான் வேற லெவல் என கூறி வருகிறார்கள். இனிமேல் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளர் மட்டுமில்லை டான்சரும் கூட எனவும் நக்கலாக தெரிவித்து வருகிறார்கள். மேலும் ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.