ஆர்யா – கௌதம் கார்த்திக்கு வில்லியாக களமிறங்கும் மஞ்சு வாரியர்.!

manju warrier - mr x

நடிகர் ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் நடிக்கும் பெரிய ஆக்‌ஷன் த்ரில்லர் படமான ‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார் என்று படக்குழு அறிவித்துள்ளனர்.

எஃப்ஐஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இயக்கும் ‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தில் மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்க, திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார்.

Manju Warrier
Manju Warrier [Image Source : @Prince_Pictures]

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த அதிரடி திரைப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர் ஒரு நெகடிவ் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் கௌதம் கார்த்திக்கிற்கு ஜோடி இல்லாத நிலையில், ஆர்யாவுக்கு ஜோடியாக நடிகை அனகா நடிக்கிறாராம்.

MrX
MrX [Image Source : @saloon_kada]

மிஸ்டர் எக்ஸ் அதிகாரப்பூர்வமாக இன்று முஹுரத் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. பூஜை விழாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இன்று இணையத்தில் வெளிவர வாய்ப்புள்ளது. ‘Mr X’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் 2024ஆம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்