ரசிகர்களுக்கு மீண்டும் சர்ப்ரைஸ்! STR51 படத்தின் வெறித்தனமான அப்டேட்!

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்திற்கு ‘GOD OF LOVE' என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Silambarasan TR

சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது. முதல் அப்டேட்டாக பார்க்கிங் படத்தின் இயக்குநர் இயக்கத்தில் தன்னுடைய 49-வது படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.  அதனைத்தொடர்ந்து அடுத்ததாக அவருடைய 50-வது படத்தினை தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளதாகவும், படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் இசையமைக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து அவர் அடுத்ததாக இயக்குநர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்திற்கான பெயர் என்ன என்பது பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே, இவர்கள் இருவரும் இணையவுள்ள இந்த படத்தின் அப்டேட் வெளியாகிவிட்டது. படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் படம் காதல் சம்மந்தப்பட்ட படமாக இருக்கும் எனவும் சொல்லப்பட்டது.

ஏற்கனவே, வெளியான ஒரு போஸ்டரில் சிம்பு இதற்கு முன்பு நடித்த பல படங்கள் ரெபரென்ஸ் கொண்ட பொருட்களை அணிந்திருந்தார். அதனைத்தொடர்ந்து இப்போது படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதன்படி, படத்திற்கு ‘GOD OF LOVE என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் போஸ்டறில் சிம்பு வில்லன் தோரணை கொண்ட ஒரு தோற்றத்தில் இருக்கிறார்.

அதுமட்டுமின்றி, இந்த போஸ்டரை வெளியிட்டதை தொடர்ந்து சிம்பு தனது சமூக வலைத்தள பக்கங்களில் ” காதல் இருக்கும் பயத்தினில் தான் கடவுள் பூமிக்கு வருவதில்லை… மீறி அவன் பூமி வந்தால்…? என தீனா படத்தில் வாலி எழுதிய சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல் பாடலின் வரிகளை குறிப்பிட்டுள்ளார். எனவே, படத்திற்கும் ‘GOD OF LOVE என  வைக்கப்பட்டுள்ள காரணத்தால் படம் வித்தியாசமான படமாக இருக்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் ரிலீஸ் ஆகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்