சர்ச்சைக்கு மத்தியில் 4 நாட்களில் ரூ.400 கோடியை எட்டிய ஆதிபுருஷ் திரைப்படம்.!
பிரபாஸ் மற்றும் கிருத்தி சனோன் நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம் நான்கு நாட்களில் உலகம் முழுவதும் ரூ.400 கோடியை எட்டியுள்ளது. பல சர்ச்சைகளுக்கு மத்தியில் கடந்த 17-ம் தேதி வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
முதல் நாள் ரூ.140 கோடி, 2ம் நாள் ரூ. 100 கோடி, 3ம் நாள் ரூ.100 கோடி, 4வது நாள் ரூ.35 கோடி என வசூலாகியுள்ளது. அதன்படி, நான்காவது நாள் முடிவில், படம் உலகம் முழுவதும் ரூ.375 கோடி வசூல் செய்துள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
We are grateful for your love and devotion ❤️ Jai Shri Ram! ????
Book your tickets on: https://t.co/2jcFFjFeI4#Adipurush now in cinemas near you! ✨ #Prabhas @omraut #SaifAliKhan @kritisanon @mesunnysingh #BhushanKumar #KrishanKumar @vfxwaala @rajeshnair06 @DevdattaGNage… pic.twitter.com/E1g8zTbUOe
— T-Series (@TSeries) June 20, 2023
இருப்பினும், முதல் வார இறுதியுடன் ஒப்பிடும்போது, திங்கட்கிழமை பாக்ஸ் ஆபிஸில் படம் சற்று மந்தமடைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், இன்று முதல் வசூல் மீண்டும் அதிகரிக்கும் என வர்த்தக நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். விரைவில் ரூ. 400 கோடியை எட்டும் என நம்பப்படுகிறது.
இப்படத்தில், சைஃப் அலிகான் ராவணனாக நடித்தார், சன்னி சிங், தேவதத்தா நாகே, வத்சல் சேத், சோனல் சவுகான், துருப்தி தோரட்மல் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இத்திரைப்படம் டி-சீரிஸ் மற்றும் ரெட்ரோஃபைல்ஸ் மூலம் தயாரிக்க, அஜய்-அதுல் இசையமைத்துள்ளார்.
ஆதிபுருஷ் படத்தை திரையிடக்கூடாது:
இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் மற்றும் வசனங்கள் இந்து மத கடவுள்களான ராமர் மற்றும் அனுமனை அவமதிக்கும் விதமாகவும், மத ரீதியாக புண்படுத்தும் விதமாகவும் இருப்பதாகக் கூறி இந்த படத்தை திரையரங்குகளில் திரையிடுவதை உடனடியாக ரத்து செய்யவேண்டும் என பிரதமருக்கு அகில இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கடிதம் மூலமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.