ஐயோ…அவரா வேண்டவே வேண்டாம்…அலறும் அஜித் ரசிகர்கள்.!!
நடிகர் அஜித் குமார் தற்போது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
இதற்கிடையில், அஜித் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கான தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், அஜித் மீண்டும் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம்.
அது அஜித்தின் 63-வது படமாகவும் இருக்க வாய்ப்புகள் உள்ளதாம், இந்த தகவலை பார்த்த அஜித் ரசிகர்களை சிலர் ஷாக்கில் அவரா வேண்டவே வேண்டாம் என கருத்துக்களை கூறி வருகிறார்கள். அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விஸ்வாசம், விவேகம், உள்ளிட்ட 4 படங்களை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் மீண்டும் அஜித் !
AK Fans : pic.twitter.com/cWtFJVlTQ2
— ♔ ராவணன் ♔ (@itz__Sandiyar) June 19, 2023
இதில் விவேகம் படத்தை தவிர மீதமுள்ள 3 படங்களும் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது. அப்படி இருந்தும் சில அஜித் ரசிகர்கள் சிறுத்தை சிவா இயக்கத்தில் மீண்டும் படங்களில் நடிக்கவேண்டும் என ரசிகர்கள் கூறுவது சிலருக்கு அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
siruthai siva & thala fanspic.twitter.com/P6JdbGkZyW@rakesh_tarakian @BeingHarish_ https://t.co/2vJ7NVZYBc
— atman (@shhaggy_) June 19, 2023
மேலும், இயக்குனர் சிறுத்தை சிவா தற்போது நடிகர் சூர்யாவை வைத்து பிரமாண்ட பட்ஜெட்டில் கங்குவா திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை இயக்கி முடித்து படம் வெளியான பிறகே அஜித்தை வைத்து அவர் ஒரு படம் இயக்குவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Ajith fans : இந்த படத்துக்கு யாருயா வில்லன் ?
Siruthai siva : pic.twitter.com/zSbiw6Q2lJ https://t.co/HLenwo8Njc
— C r a z y _ B o y ????️ (@crazy_boy__65) June 19, 2023