பிரபாஸ் மற்றும் கிருத்தி சனோன் நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் ரூ.300 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 17-ம் தேதி வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. படத்தை பார்த்த பலரும் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் சரியில்லை, படத்தின் ஸ்க்ரீன் பிளே சரியில்லை. படம் பொம்மை படம் போல இருக்கிறது என வெளிப்படையாகவே கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
ஆனால், விமர்சனங்கள் எப்படி வந்தாலும், வசூலில் படம் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. ஆனால், முதல் நாளைவிட இரண்டாம் நாளில் ஆதிபுருஷ் வசூல் குறைந்துள்ளது. முதல் நாளான வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் ரூ.140 கோடி வசூலித்ததாகவும் இரண்டாம் நாளான சனிக்கிழமை ரூ.100 கோடி வசூலித்ததாகவும் கூறப்படுகிறது. அதாவது முதல் நாளைவிட இரண்டாம் நாள் வசூல் ரூ.40 கோடி குறைந்துள்ளது.
இந்நிலையில், 2 நாட்களில் மட்டும் ரூ. 240 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் அதிக வசூல் வரும் என படக்குழு கணித்துள்ளது. அதன்படி, நேற்று வரை உலக முழுவதும் இப்படம் ரூ. 300 கோடி வாசலுத்திருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
ஆதிபுருஷ்:
ராமாயண காவியத்தை அடிப்படையாகக் கொண்ட புராண கதையை தழுவி எடுக்கப்பட்ட ஆதிபுருஷ் திரைப்படம் இறுதியாக 5 மொழிகளில் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஓம் ராவுத் இயக்கிய இப்படத்தில் பிரபாஸ் ராமராகவும், கிருத்தி சனோன் சீதையாகவும், சன்னி சிங் லட்சுமணனாகவும், சைஃப் அலி கான் ராவணனாகவும் நடித்துள்ளனர்.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…