சகோதரர் மீது 100 கோடி ரூபாய் அவதூறு வழக்கு தொடர்ந்து பேட்ட பட வில்லன்.!
பிரபல பாலிவுட் நடிகரும் தமிழில் சூப்பர் ஸ்டார் நடித்த பேட்ட படத்தில் முக்கிய வில்லனாக நடித்த நடிகர் நவாசுதீன் சித்திக், தனக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக தனது சகோதரரிடம் இருந்து ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இது தொடர்பான விசாரணை நேற்று மும்பை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த விவகாரத்தில் இருவருக்கும் இரு வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. அதாவது, நடிகர் நவாசுதீன் சித்திக் மற்றும் அவரது சகோதரர் ஷமாசுதீனுக்கு இடையேயான பிரச்சனைகளை சுமுகமாகத் தீர்ப்பதற்காக சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவேற்ற கூடாது எனவும், இந்த விவகாரத்தை நீதிமன்றத்தின் தனி அறையில் பேசி தீர்த்து கொள்ள சகோதரர்கள் இருவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு ஏப்ரல் 21ம் தேதி தனித்தனியாக விசாரணைக்கு வருகிறது. அடுத்த விசாரணைக்கு வரும் வரை சமூக வலைதளங்களில் இருவரும் ஒருவரையொருவர் அவதூறாகப் பேசக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.