என்ன சொல்ல வரீங்க? விடாமுயற்சி படத்துக்கு போலாமா வேண்டாமா? குழப்பும் ரிவியூஸ்!
அஜித்குமார் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் எப்படி இருக்கிறது என படம் பார்த்த பலரும் தங்கள் விமர்சனங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
![Vidamuyarchi Online Review](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Vidamuyarchi-Online-Review.webp)
சென்னை : இன்று (பிப்ரவரி 6) அஜித் குமார் நடிப்பில் தயாராகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் உலகம் முழுக்க வெளியாகியுள்ளது. மகிழ் திருமேனி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் திரிஷா நாயகியாகவும், அர்ஜுன், ஆரவ், ரெஜினா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாகவும் நடித்துள்ளனர்.
2023-ல் விஜயின் வாரிசு படத்துடன் வெளியான துணிவு படத்திற்கு பிறகு சுமார் 2 வருடங்கள் கழித்து அஜித் நடிப்பில் விடாமுயற்சி படம் வெளியாகி உள்ளதால் அஜித் ரசிகர்கள் நேற்று இரவு முதலே கொண்டாட்டங்களை ஆரம்பித்துவிட்டனர். (விஜய் நடிப்பில் இந்த 2 வருடத்தில் லியோ, G.O.A.T என இரு படங்கள் ரிலீசாகி ஹிட்டாகியுள்ளன)
எதையும் எதிர்பார்க்காதீங்க..,
படத்தின் புரொமோஷனுக்காக இயக்குனர் மகிழ் திருமேனி தனது ஒவ்வொரு பேட்டியிலுமே இது அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் கொண்டாட்டங்களுக்கான படம் இல்லை. மாஸ் வசனங்கள், மாஸ் இடைவேளை காட்சி, தேவையற்ற சண்டைக்காட்சிகள் என எதுவும் இருக்காது. கதைக்கு என்ன தேவையோ அதுமட்டுமே இருக்கும். அதனை தான் அஜித் சாரும் எதிர்பார்த்தார் என ரசிகர்களை ஒரு மைண்ட் செட்டில் வைத்தே படம் பார்க்க வர சொன்னார்.
இயக்குனர் மகிழ் திருமேனி கூறியது போலவே தான் படத்தின் முதல் காட்சி ரிசல்ட்டும் கிடைத்து வருகிறது. படம் முடிந்து வெளியே வரும் ரசிகர்கள் ஆஹா ஓஹோ என்று கூறாமல் பெரும்பாலானோர் படம் நல்ல இருக்கு என்ற பதிலை மட்டுமே கூறி செல்கிறன்றனர். இதில் இருந்தே இது கொண்டாட்டங்களுக்கான படம் இல்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அடுத்து ரிவியூ பக்கம் செல்வோம்.
விடாமுயற்சி – வீண்முயற்சி
பிரபல யூ-டியூபர் கிறிஸ்டோபர் கனகராஜ் என்பவர், விடாமுயற்சி – வீண்முயற்சி என பதிவிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார். அதில் அஜித், திரிஷா நன்றாக நடித்துள்ளனர். அர்ஜுன், ரெஜினா ஓகே, அனிருத் இசை நன்றாக இருந்தது. அர்பைஜான் காட்சிகள் நன்றாக இருந்தது. மற்றபடி பெரிய டிவிஸ்ட் எதுவும் இல்லை. யூகிக்கும்படியான கதை என பதிவிட்டுள்ளார்.
AK Gud Screen Presence. AK-Trisha Romantic portion is Dull. Arjun, Regina Near. Music ok. Songs gud. Azerbaijan landscape visuals super. Weak Story, No emotions, No twists; Unexciting, Flat & Draggy Narration. Style with no substance. Total DISAPPOINTMENT!
— Christopher Kanagaraj (@Chrissuccess) February 6, 2025
நல்ல ஆக்சன் திரில்லர் படம்
லெட்ஸ் OTT குளோபல் எக்ஸ் தள பக்கத்தில், விடாமுயற்சி ஒரு நன்கு எடுக்கப்பட்ட ஒரு ஆக்சன் திரில்லர் படம். ஆழமான செண்டிமெண்ட் உள்ள படம். அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். அஜித்தின் நடிப்பு அட்டகாசம். சண்டை காட்சிகள், கார் சேசிங் எனநன்றாக நடித்துள்ளார். அனிருத் இசை நன்றாக இருக்கிறது. அஜித் – திரிஷா ஜோடி நன்றாக இருக்கிறது. வசனங்கள் தற்காலத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் உள்ளது என பாராட்டி எழுதப்பட்டுள்ளது.
எதிர்மறை என குறிப்பிட்டு, ரெஜினாவின் பிளாஸ்பேக் காட்சிகள் நீளமாக உள்ளது. காமெடி வசனங்கள் எதுவும் இல்லை என்றும், படத்தில் வரும் அர்பைஜான் காட்சிகளில் வசனமும் அர்பைஜான் நாட்டு மொழியிலேயே இருக்கிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
#Vidaamuyarchi (4.5/5)
blast Screenplay & cinematography… Raw Stylish & Praiseworthy performance from #AjithKumar.@anirudhofficial Ultimate trigger Bgm… Pather acting from regina.. Neat negative shade of #Aarav.
Therikka villanic acting from @akarjunofficial.…
— Cine Time (@CineTimee) February 6, 2025
விடாமுயற்சி – அருமை
சினிமா விமர்சகர் ரமேஷ் பாலா குறிப்பிடுகையில், விடாமுயற்சி படம் அருமையாக இருக்கிறது. அஜித் – திரிஷா ரொமான்ஸ், சஸ்பென்ஸ், ஆக்சன் நன்றாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார்.
#VidaaMuyarchi [4/5] : Excellent Romance.. Suspense.. Action..#AK at his Best.. 🔥
— Ramesh Bala (@rameshlaus) February 6, 2025
அதே போல படம் பார்த்த மற்ற சிலரின் எக்ஸ் தள விமர்சனங்களையும் கிழே காணலாம்.
#VidaaMuyarchi – An Okayish Action Thriller. AK Delivers A Superb Performance. Anirudh’s Background Score Is Fantastic. The Savadikka Song And Car Fight Scene Are Major Highlights. 2nd Half Screenplay Could Have Been Better. It Would Have Been More Impactful If Ajith Had Starred…
— Trendswood (@Trendswoodcom) February 6, 2025
#Vidaamuyarchi: No Mass opening scene, No Mass BGM, No Mass scene/Build-up but yet director MagizhThirumeni has pulled up the First Half so racy💥#Anirudh has underplayed his BGM, for the content driven genre perfectly🎶 pic.twitter.com/k2xXiXGImA
— AmuthaBharathi (@CinemaWithAB) February 6, 2025