அடி பொலி! 5 மாசம் தான் 1000 கோடி கல்லா கட்டிய மலையாள சினிமா!
சென்னை : மலையாள சினிமாவில் இந்த ஆண்டு 5 மாதங்களில் வெளியான படங்களின் வசூல் அனைத்தையும் சேர்த்து 1000 கோடிகளுக்கு மேல் வந்துள்ளது.
மலையாள சினிமாவில் இந்த வருடம் ஜனவரி முதல் மே மாதம் வரை வெளியான பல படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கிறது. இந்நிலையில், இந்த வருடம் முடிய இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில், இந்த 5 மாதங்களில் இதுவரை வெளியான படங்களின் வசூல் அனைத்தையும் சேர்த்து மலையாள சினிமா 1,000 கோடி வசூலை கடந்து அசத்தியுள்ளது.
மஞ்சும்மல் பாய்ஸ்
இந்த திரைப்படம் திரைப்படம் மலையாள சினிமா மட்டுமின்றி எல்லா மொழிகளும் பலத்த வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கிறது. வசூல் ரீதியாக இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 241-கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆடு ஜீவிதம்
பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் வெளியான இந்த ஆடு ஜீவிதம் திரைப்படமும் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக உலகம் முழுவதும் 159 கோடி வசூல் செய்து இருந்தது.
ஆவேசம்
பஹத் பாசில் நடிப்பில் வெளியான ஆவேசம் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் குறிப்பாக இளைஞர்களுக்கு மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருந்தது. இந்த திரைப்படமும் உலகம் முழுவதும் 155 கோடி வசூல் செய்து இருந்தது.
பிரேமலு
இந்த ஆண்டு காதலர்களை கொண்டாட வைத்த திரைப்படம் என்றால் பிரேமலு படம் என்று கூறலாம். அந்த அளவிற்கு பிரேமலு படத்திற்கு வரவேற்பு கிடைத்தது. பிரேமலு படம் உலகம் முழுவதும் 135 கோடி வசூல் செய்து இருந்தது.
வருஷங்களுக்கு சேஷம் – 82
பிரம்மயுகம் – 58
குருவாயூர்அம்பலநடையில் – 41 கோடி
ஆபிரகாம் ஓஸ்லர்- 40
மலைக்கோட்டை வாலிபன் – 29 கோடி
இந்தியாவில் இருந்து மலையாளி – 30 கோடி
அன்வேஷிப்பின் கண்டேதும்- 16 கோடி
பாவிகேர்டேக்கர் – 15 கோடி
என மொத்தமாக இந்த படங்களின் வசூலை எல்லாம் சேர்த்தால் 1000 கோடிகளுக்கு மேல் ஆகும். தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்து மலையாள சினிமா இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. அடுத்ததாக இந்த மாதம் மம்முட்டி நடித்துள்ள டர்போ படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.