kalaipuli thanu mysskin [File Image]
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக ஹிட் ஆன நிலையில், அடுத்தாக அதனுடைய இரண்டாவது பாகத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இந்த இரண்டாவது பாகத்தில் விஜய் சேதுபதி காட்சிகள் அதிகமாக வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே, முதல் பாகத்திற்கான படப்பிடிப்பே 1 ஆடுகளுக்கு மேல் முடியாமல் நீடித்து கொண்டே இருந்தது. அதைப்போல தான் தற்போது விடுதலை 2வும் முடியாமல் நீண்ட மாதங்களாகவே இழுத்துக்கொண்டு இருக்கிறது. அதற்கு காரணம் இயக்குனர் வெற்றிமாறன் தான் என்று கூட சொல்லலாம். ஏனென்றால், வெற்றிமாறன் ஒரு காட்சியை எடுக்கிறார் என்றால் அந்த காட்சி தனக்கு பிடித்து தான் எதிர்பார்த்த அளவிற்கு வரும் வரை விடவே மாட்டாராம்.
எனவே, இதன் காரணமாக தான் இன்னும் பட பிடிப்பு முழுவதுமாக முடியாமல் இருக்கிறது. இதன் காரணமாக விஜய் சேதுபதியால் தன்னுடைய அடுத்த படங்களில் முழு கவனம் செலுத்தி நடிக்க முடியாமல் இருக்கிறது. இந்த நிலையில், தற்போது திருவள்ளூர் பகுதியில் விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் காட்சிகள் முடிந்துவிட்டதாம்.
எனவே, அவர் அடுத்ததாக இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் தாணு தயாரிக்கவுள்ள படத்தில் நடிக்க தயாராகிவிட்டாராம். இருந்தாலும் வெற்றிமாறன் விடுதலை படத்தின் காட்சிகளை எடுக்க மற்றும் டப்பிங் பேசுவதற்கு எப்போது வேண்டுமானாலும் விஜய் சேதுபதியை அழைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. அது மட்டுமின்றி விடுதலை 2 படத்தில் நடித்த காரணத்தால் தான் விஜய் சேதுபதி மிஷ்கினை வைத்து எடுக்கும் படப்பிடிப்பு இன்னும் தொடங்காமல் இருக்கிறது.
இதனால் வெற்றிமாறன் மீது சற்று வருத்தத்தில் மிஷ்கின் மற்றும் கலைப்புலி தாணு இருக்கிறார்களாம். வருத்தத்தில் இருந்தாலும் எதுவும் பேசமுடியாத சூழலில் இருக்கிறார்களாம். ஏனென்றால் கலைப்புலி தாணு தான் வெற்றிமாறன் அடுத்ததாக சூர்யாவை வைத்து இயக்கவுள்ள வாடிவாசல் படத்தை தயாரிக்கிறார். அதைப்போல வெற்றிமாறனுக்கு மிஷ்கின் மிகவும் நெருங்கிய நண்பர்.
எனவே, எதுவும் சொல்ல முடியாமல் பொறுமையாக வெற்றிமாறன் படத்தை முடிக்கட்டும் என்று சற்று வருத்தத்தில் மிஷ்கின், தாணு இருக்கிறார்களாம். இந்த தகவலை சினிமா யூடியூப் சேனல் வலைபேச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் விடுதலை படத்தின் இரண்டாவது பாகத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…
சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…
டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…