“வருதப்படாத வாலிபர் சங்கம்” இயக்குனருடன் பணிபுரியும் இணையதள பிரபலம் !

இணையதளத்தில் டப்ஸ்மாஷ் வீடியோ மூலம் சமூக வலைதளங்களில் புகழ்பெற்றவர் மிருணாளினி ரவி. குறுகிய காலத்தில், தன்னுடைய ‘டப்ஸ்மாஷ்’ மூலம் தனக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை சமுக வலைத்தளங்களில் உருவாக்கியவர். இதன்பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்று சில படங்களில் நடிகையாகவும் நடித்துள்ளார். இவர் சுரேஷ் இயக்கத்தில் வெளிவந்த “நகல்” படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.
இந்நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை இயக்கிய பொன்ராம் இயக்கும் படத்தில் மிருணாளினி நடித்து கொண்டு வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 25 ம் தேதி தேனி மாவட்டத்தில் எடுக்கப்படும் தகவல் வெளியாகியுள்ளது.