இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆன ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது முதல் பாகத்தில் ரஜினியின் மருமகளாக நடித்திருந்த நடிகை மிர்னா மேனன் பேட்டி ஒன்றில் ஜெயிலர் 2 உருவாவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய நடிகை மிர்னா மேனன் ” ஜெயிலர் பாகம்-2 பற்றி நெல்சன் சாரிடம் பேசினேன், அவர் “ஸ்கிரிப்ட் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது” என்று கூறினார். அதனை கேட்டவுடன் நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருந்தேன். நான் படத்தின் ஒரு பகுதியாக இருக்கிறேனா என்று எனக்குத் தெரியவில்லை.
ஏனென்றால் அவர் கதாபாத்திரத்தை நீட்டிக்க விரும்பினால், நான் அதில் ஒரு பகுதியாக இருப்பேன், அது முழுக்க முழுக்க இயக்குனரின் சுதந்திரம். படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன். ரசிகர்களை போலவே நானும் படத்திற்காக மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றும் நடிகை மிர்னா தெரிவித்துள்ளார். ஜெயிலர் 2 உருவாகவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
மேலும், நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள தன்னுடைய 171 -வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அதன்பிறகு ஜெயிலர் 2-வது பாகத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…