சமந்தா விவாகரத்து குறித்து அமைச்சர் சர்ச்சை கருத்து: கொந்தளித்த சினிமா பிரபலங்கள்!

சமந்தாவின் விவாகரத்து குறித்து சர்ச்சையான கருத்தை அமைச்சர்  சுரேகா தெரிவித்த நிலையில், அவருக்கு எதிராக ஜூனியர் என்.டி.ஆர், நானி, நாகார்ஜுனா உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்துள்ளார்கள்.

samantha issue

சென்னை :   சைதன்யா, சமந்தா இருவரும் காதலித்து கடந்த  2017-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பிறகு, இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெறுவதாக இருவருமே தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் அறிவிப்பை வெளியீட்டு இருந்தார்கள். பிறகு, நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்துக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

அமைச்சரின் சர்ச்சை கருத்து

இந்நிலையில், பொதுவாகவே ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேசும்போது அதற்கு பின் வரும் விளைவுகளை பற்றி யோசிக்காமல் பலர் பேசி விடுகிறார்கள். அப்படி தான், சமந்தா விவாகரத்து குறித்து அமைச்சர்  சுரேகா பேசியுள்ளது பெரும் பேசுபொருளாகியுள்ளது. தெலுங்கானாவில், சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சுரேகா கலந்துகொண்டார்.

அப்போது, செய்தியாளர்களை சந்தித்த சுரேகா ” முன்னாள் முதலமைச்சரின் மகனும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராமராவ் செய்யும் அராஜகம் தான் பல நடிகைகள் விரைவிலேயே திருமணம் செய்து கொள்கிறார்கள் எனவும், அவரால்தான் சமந்தாவுக்கு விவாகரத்து நடந்தது” எனவும் குற்றம்சாட்டி பேசியிருந்தார்.

சமந்தா சொன்ன பதில் ?

இவர் பேசியிருந்த விஷயம் பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், சமந்தா தனது சமூக வலைதள பக்கங்களில் அமைச்சர் பேச்சுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கை வெளியீட்டு பதில் அளித்து இருந்தார். அதில், ” எனது விவாகரத்து பரஸ்பர சம்மதத்துடன் நடந்த ஒன்று. அதில் எந்த அரசியல் சதியும் இல்லை. தயவுசெய்து எனது பெயரை அரசியல் சண்டைகளில் இழுக்க வேண்டாம். நான் எப்போதும் அரசியலுக்கு அப்பாற்பட்டவள். இனியும் அப்படி இருக்க விரும்புகிறேன்”  என கூறியிருந்தார்.

Statement from SAMANTHA
Statement from SAMANTHA [File Image]

எழுந்த கண்டனங்கள்

சமந்தா விவாகரத்து பற்றி அமைச்சர் பேசிய விஷயம் தெரிந்தவுடன் சினிமாவை சேர்ந்த பல பிரபலங்களும் அவருடைய பேச்சுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இதுவரை யாரெல்லாம் தெரிவித்துள்ளார்கள் என்பதை இதில் பார்ப்போம்…

நாக சைதன்யா

நாக சைதன்யா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் விவாகரத்து முடிவு ஒருவர் எடுக்க வேண்டிய மிகவும் வேதனையான மற்றும் துரதிர்ஷ்டவசமான வாழ்க்கை முடிவுகளில் ஒன்றாகும். பல யோசனைகளுக்குப் பிறகு, நானும் எனது முன்னாள் மனைவியும் பிரிந்து செல்ல ஒரு பரஸ்பர முடிவு எடுக்கப்பட்டது.

இது எங்கள் வெவ்வேறு வாழ்க்கை இலக்குகளின் காரணமாக எடுக்கப்பட்ட முடிவு.இந்த விஷயத்தில் பல்வேறு ஆதாரமற்ற மற்றும் முற்றிலும் கேலிக்குரிய கிசுகிசுக்கள் இதுவரை வந்துள்ளன. எனது முந்தைய மனைவி மற்றும் எனது குடும்பத்தினர் மீதான ஆழ்ந்த மரியாதை காரணமாக நான் இதையெல்லாம் அமைதியாக இருந்தேன்.

இன்று, அமைச்சர் கோண்டா சுரேகாவின் சொல்லும் விஷயம் பொய்யானது மட்டுமல்ல, ஏற்றுக்கொள்ள முடியாதது ஒரு விஷயம். பெண்கள் ஆதரவு மற்றும் மரியாதைக்கு தகுதியானவர்கள். பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை முடிவுகளை மீடியா தலைப்புச் செய்திகளுக்காக பயன்படுத்திக் கொள்வதும், சுரண்டுவதும் வெட்கக்கேடானது” என கட்டத்துடன் கூறியுள்ளார்.

அல்லு அர்ஜுன்

நடிகர் அல்லு அர்ஜுன் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ” ஆதாரமற்ற தரக்குறைவான கருத்துகளை வன்மையாகக் கண்டிக்கிறேன் திரைப்பட பிரமுகர்கள் மற்றும் திரைப்பட குடும்பங்கள். அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி அவமரியாதை படுத்தும் வகையில் பேசியது நமது தெலுங்கு கலாச்சாரத்தின் மதிப்புகளுக்கு எதிரானது.

இதுபோன்ற பொறுப்பற்ற செயல்களை சாதாரணமாக ஏற்றுக்கொள்ளக் கூடாது. சம்பந்தப்பட்ட தரப்பினர் மிகவும் பொறுப்புடன் நடந்துகொள்ளவும், தனிப்பட்ட தனியுரிமையை மதிக்கவும், குறிப்பாக பெண்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன். ஒட்டுமொத்த சமுதாயத்தில் மரியாதையையும் கண்ணியத்தையும் வளர்க்க வேண்டும்” எனக்கூறியுள்ளார்.

சிரஞ்சீவி

நடிகர் சிரஞ்சீவி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் மதிப்பிற்குரிய பெண் அமைச்சர் ஒருவரின் இழிவான கருத்துக்களைக் கண்டு நான் மிகவும் வேதனையடைந்தேன். பெண் பற்றி இப்படியான ஒரு கருத்தை தெரிவிப்பது வெட்கக்கேடானது. திரைப்படத் துறையினராகிய நாங்கள் எங்கள் உறுப்பினர்கள் மீதான இத்தகைய மோசமான வார்த்தைத் தாக்குதல்களை எதிர்ப்பதில் ஒன்றுபட்டு நிற்கிறோம்.

சமூகத்தை வாழ்வதற்கு சிறந்த இடமாக மாற்றுவதற்காகவே நாங்கள் எங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கிறோம், சொற்பொழிவைத் தாழ்த்தி அதை மாசுபடுத்தக்கூடாது. அரசியல்வாதிகள் மற்றும் கௌரவமான பதவிகளில் இருப்பவர்கள் சிறந்த முன்மாதிரியாக இருக்க வேண்டும்” எனவும் கூறியுள்ளார்.

நாகார்ஜுனா

நடிகர் நாகார்ஜுனா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் “அமைச்சர் கோண்டா சுரேகா அவர்களின் கருத்துகளை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் சினிமா நட்சத்திரங்களின் வாழ்க்கையை எதிரிகளை விமர்சிக்க பயன்படுத்தாதீர்கள்.

தயவுசெய்து மற்றவர்களின் தனியுரிமையை மதிக்கவும். பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு பெண்ணாக, எங்கள் குடும்பத்திற்கு எதிரான உங்கள் கருத்துக்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொருத்தமற்றவை மற்றும் தவறானவை. உங்கள் கருத்துக்களை உடனடியாக திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக்கூறியுள்ளார்.

நானி

நடிகர் நானி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில்” எப்பேர்ப்பட்ட முட்டாள்தனத்தையும், பேசி தப்பித்து விடலாம் என்று நினைக்கும் அரசியல்வாதிகளைப் பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது. உங்கள் வார்த்தைகள் மிகவும் பொறுப்பற்றதாக இருக்கும்போது, ​​உங்கள் மக்களுக்காக உங்களுக்கு ஏதேனும் பொறுப்பு இருக்கும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

இது நடிகர்கள் அல்லது சினிமா சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. இது எந்த அரசியல் கட்சிக்கும் பொருந்தாது. இவ்வளவு மரியாதைக்குரிய பதவியில் இருப்பவர் ஊடகங்களுக்கு முன்னால் இப்படி அடிப்படை ஆதாரமற்ற குப்பைகளைப் பேசுவதும் சரி என்று நினைப்பதும் சரியல்ல. நமது சமூகத்தை மோசமாகப் பிரதிபலிக்கும் இத்தகைய செயலை நாம் அனைவரும் கண்டிக்க வேண்டும்” என கோபத்துடன் கூறியுள்ளார்.

ஜூனியர் என்.டி.ஆர்

நடிகர் ஜூனியர் என்டிஆர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ” கோண்டா சுரேகா அவர்களே, தனிப்பட்ட வாழ்க்கையை அரசியலுக்கு இழுப்பது ஒரு  தாழ்வு. பொது நபர்கள், குறிப்பாக உங்களைப் போன்ற பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள், தனியுரிமைக்கு கண்ணியத்தையும் மரியாதையையும் பராமரிக்க வேண்டும். குறிப்பாக திரையுலகைப் பற்றி ஆதாரமற்ற அறிக்கைகள் கவனக்குறைவாக வீசப்படுவது வருத்தமளிக்கிறது.

மற்றவர்கள் எங்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறும்போது நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். நாம் இதை விட உயர்ந்து ஒருவருக்கொருவர் எல்லைகளை மதிக்க வேண்டும். ஜனநாயக இந்தியாவில் இத்தகைய பொறுப்பற்ற நடத்தையை நமது சமூகம் இயல்பாக்காது என்பதை உறுதி செய்வோம்” எனக்கூறியுள்ளார்.

வருத்தம் தெரிவித்த சுரேகா

Read More- “இழிவுப்படுத்த அப்படிப் பேசவில்லை”…சமந்தாவுக்கு எதிரான கருத்து – வாபஸ் பெற்ற அமைச்சர்!

சமந்தா விவாகரத்து பற்றி அவர் பேசிய விவகாரம் இந்த அளவுக்கு சர்ச்சையாக வெடித்த காரணத்தால், கே.டி.ராமராவ் அமைச்சர் சுரேகா 24 மணி நேரத்திற்குள் தனது அறிக்கைகளைத் திரும்பப் பெற வேண்டும் மற்றும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதனையடுத்து, அமைச்சர் சுரேகாசமந்தா விவாகரத்து குறித்த சர்ச்சை கருத்தைத் திரும்பப் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்