சமந்தா விவாகரத்து பற்றி அமைச்சர் சுரேகா அவதூறு பேச்சு! வழக்கு தொடர்ந்த நாகர்ஜுனா?
சமந்தா- நாக சைதன்யா விவாகரத்து குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில், தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகாவுக்கு எதிராக நடிகர் நாகர்ஜுனா நம்பள்ளி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை : நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டார்கள். இருவரும் பிரிந்து தற்போது, தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பார்த்துக்கொண்டு இருக்கிறர்கள். இந்த சூழலில், அவர்களுடைய பெயரை கலங்க படுத்தும் வகையில், இவர்களுடைய விவாகரத்து குறித்து அமைச்சர் சுரேகா சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார்.
தெலுங்கானாவில், சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சுரேகா கலந்துகொண்டார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்த சுரேகா ” முன்னாள் முதலமைச்சரின் மகனும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராமராவ் செய்யும் அராஜகம் தான் பல நடிகைகள் விரைவிலேயே திருமணம் செய்து கொள்கிறார்கள் எனவும், அவரால்தான் சமந்தாவுக்கு விவாகரத்து நடந்தது” எனவும் குற்றம்சாட்டி பேசியிருந்தார்.
தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அமைச்சர் சுரேகா பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், இவருடைய பேச்சுக்கு அல்லு அர்ஜுன், ஜூனியர் என்டிஆர், நானி, மகேஷ் பாபு உள்ளிட்ட பல பிரபலங்களும் தங்களுடைய கண்டங்களை தெரிவித்து சமந்தாவுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தார்கள். இதனையடுத்து, தன்னுடைய அவதூறு பேச்சுக்கு அமைச்சர் சுரேகா மன்னிப்பு கேட்டு இருந்தார்.
ஆனால், மன்னிப்பு கேட்டாலும், இந்த பிரச்சினையை சட்ட ரீதியாக சந்திக்க நாக சைதன்யா குடும்பம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, அவருடைய தந்தையான நாகார்ஜுனா சமந்தா- நாக சைதன்யா விவாகரத்துக்கு கே.டி. ராமாராவ் காரணம் என அவதூறாக பேசிய விவகாரத்தில், தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகாவுக்கு எதிராக நம்பள்ளி நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். எனவே, இந்த விவகாரத்தில் அமைச்சர் சுரேகா மீது வழக்குபதிவு செய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
— chaitanya akkineni (@chay_akkineni) October 3, 2024