சமந்தாவை அசிங்கப்படுத்திய அமைச்சர்.. பொங்கி எழுந்த மகேஷ் பாபு.!
தெலுங்கு திரையுலகமே கொண்டா சுரேகாவை #FilmIndustryWillNotTolerate என்ற ஹேஷ்டேக் மூலம் விமர்சித்து வருகின்றனர்.
சென்னை : தெலுங்கானா அமைச்சர் கொண்டா சுரேகாவின் சர்ச்சைக்குரிய கருத்து தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை சமந்தாவின் விவாகரத்து, ரகுல் ப்ரீத் சிங் திருமணம், அக்கினேனி நாகார்ஜுனா குடும்பம், போதைப்பொருள், போன் ஒட்டுக் கேட்பது போன்ற பிரச்சனைகளை எழுப்பி கே.டி.ஆர் மீது அமைச்சர் கொண்டா சுரேகாவின் தகாத கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால், தெலுங்கு திரையுலகமே கொண்டா சுரேகாவை #FilmIndustryWillNotTolerate என்ற ஹேஷ்டேக் மூலம் விமர்சித்து வருகின்றனர். பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் தொடங்கிஎன்டிஆர், நேச்சுரல் ஸ்டார் நானி, ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன், ரவி தேஜா, இயக்குனர் ஹரிஷ் ஷங்கர் என பல பிரபலங்கள் இந்த விவகாரத்திற்கு தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தற்பொழுது, தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தனது எக்ஸ் பக்கத்தில், “அமைச்சர் கொண்டா சுரேகா எங்கள் திரையுலக பிரபலங்கள் குறித்த உங்கள் கருத்து மிகவும் வருத்தமளிக்கிறது. ஒரு மகளுக்கு தகப்பனாக, மனைவிக்கு கணவனாக, ஒரு தாய்க்கு மகனாக, இன்னொரு பெண்ணுக்கு எதிராக ஒரு பெண் அமைச்சரின் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துக்கள் மற்றும் மொழிகளால் நான் மிகவும் வேதனையடைந்தேன்.
மற்றவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தாத வரையில் பேச்சு சுதந்திரத்தைப் பயன்படுத்தலாம். உங்கள் மலிவான ஆதாரமற்ற கருத்துக்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
திரைத்துறையை கேவலமாக பார்க்க வேண்டாம் என பொது மக்களிடம் கேட்டுக் கொள்கிறேன். நம் நாட்டு பெண்களையும், சினிமா சகோதரர்களையும் மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
Extremely pained by the comments made by Minister Konda Surekha garu on fellow members of our film fraternity. As a father of a daughter, as a husband to a wife and as son to a mother… I am deeply anguished by the unacceptable remarks and language used by a woman minister on…
— Mahesh Babu (@urstrulyMahesh) October 3, 2024