சர்கார் படத்தில் இடம்பெற்றிருந்த அதிமுக அரசை விமர்சித்த காட்சிகளை நீக்கியது தணிக்கைத் துறை.
தளபதி விஜய் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் 3வதாக உருவான திரைப்படம் சர்கார். இப்படத்திற்க்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது.படத்திற்கு எதிர்பார்த்தது போலவே முதல் நாள் நல்ல வசூல் செய்தது.
ஆனால் படத்தில் அரசை விமர்சித்து பல காட்சிகள், வசனங்கள் இடம் பெற்றது. அதிலும் குறிப்பாக அதிமுக ஆட்சியில் கொடுத்த இலவச மிக்ஸியை இயக்குனர் முருகதாஸ் தீயில் எரிவது போல காட்சி இடம்பெறும் இது அதிமுககாரர்களை மிகுந்த கோபத்தை உண்டாக்கியது. ஆதலால் அவர்கள் சர்கார் ஓடும் திரையரங்கில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சர்கார் படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகளை மறுதணிக்கையில் தணிக்கைக்குழு நீக்கியது.சர்கார் படத்தில் இடம்பெற்றிருந்த அதிமுக அரசை விமர்சித்த காட்சிகளை நீக்கியது.
இது தொடர்பாக தணிக்கைத் துறை வெளியிட்ட தகவலில் , சர்கார் திரைப்படத்தில் விலையில்லா மிக்சி, கிரைண்டரை எரிக்கும் 5 வினாடி காட்சி நீக்கபட்டுள்ளது.அதேபோல் கோமளவல்லி மற்றும் பொதுப்பணித்துறை என்ற வார்த்தை வரும் இடங்களில் மியூட் செய்யப்பட்டுள்ளது.மேலும் பொதுப்பணித்துறை மற்றும் 56 வருஷம் என்று இடங்களில் மியூட் செய்யப்பட்டுள்ளது.
இதனால் மறு தணிக்கை செய்யப்பட்ட சர்கார் படம் இன்று மாலை 70% திரையரங்குகளில் திரையிட வாய்ப்பு உள்ளது.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ஜனவரி 9-ஆம்…
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…