தளபதி 68 படத்தை முடித்த மைக் மோகன்…செய்தியாளர் கேள்விகளுக்கு Thug ரிப்ளை!

Mike Mohan

நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கும் அவருடைய 68-வது படத்திற்கான படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இந்த படத்தில் 90ஸ் காலகட்ட ஹீரோவான மைக் மோகன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

படத்தில் நடிகர் மைக் மோகன் தான் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்னு கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், உண்மையாகவே படத்தில் அவர் எந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது தளபதி 68 படத்தின் டீசர் டிரைலர் வெளியான பிறகு தான் தெரியவரும்.

சமீபத்தில், லியோ திரைப்பட இசைவெளியிட்டு விழாவை முடித்துக்கொண்டு, தனது ‘தளபதி 68’ பட படப்பிடிப்புக்காக தாய்லாந்தின் தலைநகரமான பாங்காக் சென்றார். இந்த நிலையில், தளபதி படத்தில் நடித்து முடித்து கொண்டதாக நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில், கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு  நக்கலாக பதில் கூறியுள்ளார்.

கமல், ரஜினிக்கு போட்டியாக 1980-1990 காலக்கட்டத்தில் பல படங்களை கொடுத்தவர் மோகன். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவிற்கு திரும்பியிருக்கிறார். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ள மைக் மோகன், தளபதி 68 படத்தில் நடித்துள்ளதால் ஒரு புதிய எதிபார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தளபதி 68

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் “தளபதி 68” திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் மீனாட்சி, லைலா, ஸ்னேகா, பிரசாந்த், பிரபு தேவா, வைபவ், மோகன், பிரேம் ஜி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

தளபதி 68 படப்பிடிப்பு

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. பூஜைக்கான வீடியோவும் சமீபத்தில் வெளியிடப்பட்டது. தற்பொழுது, இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது தளபதி 68 படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது என்றும், அடுத்ததாக அடுத்தகட்ட படப்பிடிப்பு தென் ஆப்ரிக்காவில் நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது.

வெங்கட் பிரபு பிறந்த நாள் ட்ரீட்! அசத்தலாக வெளியான ‘தளபதி 68’ அப்டேட்!

படப்பிடிப்பை முடித்த மைக் மோகன்

இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்கும் மைக் மோகன், சென்னை அடுத்த ஆவடியில் உள்ள முதியோர் இல்லத்தில் வசிப்பவர்களுக்கு உணவு, உடை, இனிப்புகள் வழங்கி தீபாவளியை நடிகர் மோகன் கொண்டாடினார். அதன்பின் இப்படம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இப்படத்தில் தன்னுடைய போர்ஷன் முடிந்துவிட்டதாக கூறினார்.

தளபதி 68-க்கு அப்புறம் என்ன சார்? என்று செய்தியாளர் கேட்க, அதற்கு மோகன், 69 தான் என்று மேலும் சில கேள்விகளுக்கு ‘Thug’ பாணியில் பதில் அளித்துள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. விரைவில் தளபதி 68 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் மோகன்

1980 காலகட்டத்தில் பல வெற்றிப்படங்களை கொடுத்த மைக் மோகன் கடைசியாக கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான சுட்டப்பழம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த ஒரு தமிழ் திரைப்படத்திலும் நடிகர் மைக் மோகன் ஹீரோவாக நடிக்கவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்