Sarvadhikari : நம்பியாரை வேற லெவலுக்கு கொண்டு சென்ற எம்ஜிஆர்? ‘சர்வாதிகாரி’ பற்றி யாருக்கும் தெரியாத ரகசியம்!

Sarvadhikari

இயக்குனர் டி.ஆர்.சுந்தரம் இயக்கத்தில் எம்.ஜி.ராமச்சந்தர் நடிப்பில் 1951 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்வாதிகாரி. இதுவரை எம்.ஜி.ஆர் நடித்த எத்தனையோ படங்கள் ஹிட் ஆகி இருக்கிறது, அந்த ஹிட் வரிசையில் ‘சர்வாதிகாரி’ படத்திற்கும் இடம் உண்டு. அந்த அளவிற்கு அந்த சமயமே இந்த படம் வசூல் ரீதியாவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.

கிட்டத்தட்ட இந்த திரைப்படம் சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது மற்றும் திருச்சியில் அதிகபட்சமாக 141 நாட்கள் ஓடியது. பொதுவாகவே நடிகர்ளுக்கு தங்களுடைய 25,50,100 ஆகிய என்களின் படங்கள் வெற்றியை பெறவேண்டும் என்று விரும்பி நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்வார்கள். அப்படி தான் எம்.ஜி.ஆர். தன்னுடைய 25 -வது படத்திற்கு இந்த கதை சரியாக இருக்கும் என ‘சர்வாதிகாரி’ படத்தை தேர்வு செய்தார்.

படமும் அவர் வெற்றியடையும் என்று யோசித்து தேர்வு செய்தது போலவே மிகப்பெரிய ஹிட் ஆனது. படத்தின் கதைப்படி, மணிப்பூரியின் பொம்மலாட்ட (புலிமூட்டை ராமஸ்வாமி) அரசனிடமிருந்து அதிகாரத்தைப் பறிக்க விரும்பும் ஒரு லட்சிய அமைச்சர்(மகாவர்மன்) சில திட்டங்களை யோசிக்கிறார். பிறகு பொம்மலாட்டஅரசனின் மெய்க்காவலர் (பிரதாபன்) ஆகியோரின் இருப்பதை காண்கிறார். அவர் பிரதாபனை மயக்க ஒரு இளம் பெண்ணை அனுப்புகிறார், ஆனால் அவள் அவனை காதலிக்கிறாள்.

பல திருப்பங்கள் மற்றும் திருப்பங்களுக்குப் பிறகு, பிரதாபனுடனான ஒரு அற்புதமான சண்டையில் மகாவர்மன் அம்பலப்பட்டு வீழ்த்தப்படுகிறார். உக்ரசேனர் முதல் ஜனாதிபதியாகவும், பிரதாபன் புதிய தளபதியாகவும் நியமிக்கப்பட்ட இதனை வைத்து கதைக்களம் நகரும். படத்தில் எம்.ஜி.ஆர் பிரதாபன் கதாபாத்திரத்தில் எந்த அளவிற்கு அருமையாக நடித்திருப்பாரோ அதைபோலவே அவருக்கு இணையாக  மகாவர்மன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த எம்.என்.நம்பியார் நடித்திருந்தார்.

இந்த படத்தில் நம்பியார் நடிப்பதற்கு முன்பே முன்னணி நடிகராக உயர்ந்தாலும் கூட இந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்து அவருடைய நடிப்பு பெரிதளவில் பேசப்பட்டு ஒரு பெரிய நட்சத்திரமாக அவரை உயர்த்தியது. இந்த படத்தில் நம்பியார் நடிப்பதற்கு முன்பு சில படங்களில் நடித்தார் அந்த படங்கள் சரியான விமர்சனத்தை பெறவில்லை. இதனை பார்த்த எம்.ஜி.ஆர் தான் இந்த படத்தில் நம்பியாருக்கு வாய்ப்பு கொடுங்கள் என இயக்குனர்  டி.ஆர்.சுந்தரத்திடம் கூறினாராம்.

பிறகு தான் நம்பியாருக்கு இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். இந்த படத்திலும் மகாவர்மன் கதாபாத்திரத்தில் தன்னை தவிர வேறு யாரும் நடிக்கவே முடியாது என்கிற அளவிற்கு அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்த படம் அவருக்கு மட்டும் திருப்பு முனையாக அமையவில்லை படத்தில் பூஞ்சோலையாக நடித்திருந்த நடிகை டி.பி.முத்துலட்சுமிக்கும் இந்த படம் பெரிய வெற்றியை கொடுத்து திருப்பு முனையாக அமைந்தது.

ஏனென்றால், இதற்கு முன்பு சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து எமோஷனலான கதாபாத்திரங்களில் நடித்து வந்த டி.பி.முத்துலட்சுமிக்கு இந்த பூஞ்சோலை கதாபாத்திரம் நகைச்சுவை நடிகையாகவும் துணை நடிகையாகவும்  தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வைத்தது. இதற்கு காரணமும் எம்.ஜி.ஆர் தான். ஏனென்றால், இந்த கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என படக்குழு எம்.ஜி.ஆர் இடம் கேட்டுள்ளார்கள்.

அதற்கு எம்.ஜி.ஆர் சரியாக யோசித்து இந்த கதாபாத்திரத்தில் டி.பி.முத்துலட்சுமியை நடிக்க கேளுங்கள் இந்த கதாபாத்திரத்திற்கு அவர் சரியாக இருப்பார் என கூறினாராம். இப்படி டி.பி.முத்துலட்சுமி மற்றும் நம்பியார் ஆகியோருக்கு சினிமா வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைய வாய்ப்பு கொடுத்தவர் எம்.ஜி.ஆர் தான். இவர்கள் இருவருக்கும் இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு தொடர்ச்சியாக பட வாய்ப்புகளும் குவிந்தது.

இந்த ‘சர்வாதிகாரி’ திரைப்படம்  தி கேலண்ட் பிளேட் என்ற அமெரிக்கத் திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டது. ‘சர்வாதிகாரி’தெலுங்கிலும் அதே பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.  அந்த சமயமே தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிமக்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கடந்த 1951 ஆம் ஆண்டு இதே நாளில் (செப்டம்பர் 14)-ஆம் தேதி தான் திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் வெளியாகி இன்றுடன் 72 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை எம்.ஜி.ஆர்  நடிப்பில் பல நல்ல படங்கள் வந்திருக்கிறது அதில் இந்த படமும் இடம்பெறும் என்பதில் எந்த சந்தகேமும் இல்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்