எம்.ஜி.ஆர் சொன்ன விஷயம்? கண்கலங்கி கதறி அழுத சிவாஜி கணேசன்!

M.G.Ramachandran : எம்.ஜி.ஆர் சொன்ன வார்த்தையை நினைத்து சிவாஜி கணேசன் வேதனை பட்டு கதறி அழுதுள்ளார்.
எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் நடித்து கொண்டு இருந்த காலத்தில் அவருக்கு போட்டியாக பேசப்பட்டவர் சிவாஜி கணேசன். ஆனால், இவர்களுடைய படங்கள் போட்டி எல்லாம் இரு தரப்பு ரசிகர்களுக்கும் சண்டை வரும் வகையில் எல்லாம் இருக்காது மிகவும் ஆரோக்கியமான போட்டியாக இருக்கும். எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி இருவரும் சினிமாவை தாண்டி நெருங்கிய நண்பர்கள் கூட என்று சொல்லலாம்.
குறிப்பாக எம்.ஜி.ஆர் தனக்கு வந்த கதையில் சிவாஜியை நடிக்க வைக்கலாம் என்று விட்டு கொடுப்பது அதைப்போல, சிவாஜி தனக்கு வந்த கதையில் எம்.ஜி.ஆர் நடிக்கும் படி ஏதேனும் கதை வந்தது என்றால் அதனை அப்படியே எம்.ஜி.ஆருக்கு அனுப்பி வைத்துவிடுவாராம். அந்த அளவிற்கு எம்.ஜி.ஆர் சிவாஜி படங்களை விட்டு கொடுக்கும் அளவிற்கு நட்பாக பழகி வந்தார்களாம்.
படங்களில் பிசியாக சமயத்தில் கூட எம்ஜிஆர் மற்றும் சிவாஜி இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்து கொள்வார்களாம். சண்டைகள் வந்தாலும் கூட பெரிதாக பேசிக்கொள்ளாமல் திரும்ப பேசும்போது பழைய நட்புடன் பேசிக்கொள்வார்களாம். ஒரு முறை எம்ஜிஆர் சொன்ன ஒரு விஷயம் சிவாஜியை ரொம்பவே கண்கலங்க வைத்ததாம்.
அது என்னவென்றால், ஒரு முறை எம்.ஜி.ஆர் நான் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் கூட என்னுடைய நண்பன், சகோதரன் சிவாஜி இந்த மண்ணில் உயிரோடு தான் இருப்பான். அவன் நன்றாக இன்னும் பல ஆண்டுகள் இருக்கவேண்டும் என்று கூறிவிட்டாராம். இதனை எம்.ஜி.ஆர் இறந்த பிறகு சொல்லி சொல்லி காட்டி சிவாஜி நெருங்கியவர்களிடம் கதறி அழுதாராம். இந்த தகவலை
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
நேபாளத்தில் இன்று அதிகாலையில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. பீகாரிலும் லேசான அதிர்வு.!
February 28, 2025
தமிழ்நாடு வெல்லும்: “இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா?” – முதல்வர் ஸ்டாலின் .!
February 28, 2025
சீமான் வீட்டு காவலாளிகளுக்கு மார்ச் 13ம் தேதி வரை நீதிமன்ற காவல்!
February 28, 2025
தமிழ்நாட்டின் இந்த 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் – வானிலை மையம்!
February 28, 2025