Categories: சினிமா

லாபம் வேண்டாம் சம்பளமே போதும்! தயாரிப்பாளர்களை நெகிழ வைத்த எம்.ஜி.ஆர்!

Published by
பால முருகன்

நடிகர் எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி பலருக்கும் பல உதவிகளை செய்து இருக்கிறார். குறிப்பாக உதவி என்று தேடி வரும் மக்கள் மற்றும் தன்னுடைய வீட்டில் சாப்பாடு போடுவது பண உதவி செய்வது என உயிரோடு இருந்த சமயத்தில் உதவிகளை செய்து இருக்கிறார். இதன் காரணமாகவே அவர் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவருடைய பெயர் இன்னும் பேசப்படும் ஒன்றாக இருந்து வருகிறது.

இப்படி மக்களுக்கு மட்டுமின்றி எம்.ஜி.ஆர் பல தயாரிப்பாளர்களுக்கும் உதவி செய்து இருக்கிறாராம். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் தன்னை வைத்து எங்க வீட்டுப் பிள்ளை என்ற படத்தை தயாரித்த தயாரிப்பாளர்கள் பி. நாகி ரெட்டி, சக்ரபாணி ஆகியோருக்கு பெரிய நல்லது செய்தாராம். அது என்னவென்றால், எங்கள் விட்டு பிள்ளை படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆனது.

படம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆன காரணத்தால் தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபம் கிடைத்ததாம். பிறகு பாதி லாபம் கிடைத்திருக்கிறது இதில் 1 பங்கு எம்.ஜி.ஆருக்கு கொடுக்கலாம் என்று திட்டமிட்டு தயாரிப்பாளர்கள் எம்.ஜி.ஆரை சந்தித்து பேசினார்களாம். ஆனால், சம்பளமே போதும் லாபம் எல்லாம் எனக்கு வேண்டாம் என்று எம்.ஜி.ஆர் கூறிவிட்டாராம்.

எம்ஜிஆர் காலத்தில் வெற்றி கொடி நாட்டிய ரஜினிகாந்த்.! ரசிகர் செய்த காரியத்தால் ஷாக்கான சம்பவம்…

இருந்தாலும் தயாரிப்பாளர்கள் விடாமல் வாங்கிக்கொள்ளுங்கள் வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறினார்களாம். பிறகு இறுதியாக நீங்கள் நல்ல விஷயங்கள் செய்து வருவதாக கேள்விப்பட்டேன். அதற்கு நான் கொடுக்கும் பணமாக இதனை வைத்து கொள்ளுங்கள் இதனை வைத்து நல்ல விஷயங்கள் செய்யுங்கள் என்று கூறிவிட்டாராம்.  இதனை கேட்ட அந்த தயாரிப்பாளர்களும் நெகிழ்ந்து போனார்களாம். இந்த தகவலை பிரபல பத்திரிகையாளரான AVM பிஆர்ஓ துளசி பழனிவேல் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மேலும், கடந்த 1965ஆம் ஆண்டு  வெளியான இந்த எங்க வீட்டுப் பிள்ளை திரைப்படத்தை தபி சாணக்யா இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தில் நடிகர் எம்.ஜி.ஆர் இரண்டு வேடங்களில் நடித்து இருப்பார். படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றது. படத்தில் ஜி. ஆர், நம்பியார், சரோஜா தேவி, கே. ஏ. தங்கவேலு, நாகேஷ் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

47 minutes ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

3 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

4 hours ago

புஷ்பா 2 வெளியீடு: நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச் சாவு… தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!

ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…

4 hours ago

“அம்பேத்கர்… அம்பேத்கர்…” அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன் – கொந்தளித்த விஜய்!

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…

5 hours ago

இன்றும், நாளையும் 4 மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் – டெல்டா வெதர்மேன்.!

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…

5 hours ago