லாபம் வேண்டாம் சம்பளமே போதும்! தயாரிப்பாளர்களை நெகிழ வைத்த எம்.ஜி.ஆர்!
நடிகர் எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி பலருக்கும் பல உதவிகளை செய்து இருக்கிறார். குறிப்பாக உதவி என்று தேடி வரும் மக்கள் மற்றும் தன்னுடைய வீட்டில் சாப்பாடு போடுவது பண உதவி செய்வது என உயிரோடு இருந்த சமயத்தில் உதவிகளை செய்து இருக்கிறார். இதன் காரணமாகவே அவர் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவருடைய பெயர் இன்னும் பேசப்படும் ஒன்றாக இருந்து வருகிறது.
இப்படி மக்களுக்கு மட்டுமின்றி எம்.ஜி.ஆர் பல தயாரிப்பாளர்களுக்கும் உதவி செய்து இருக்கிறாராம். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் தன்னை வைத்து எங்க வீட்டுப் பிள்ளை என்ற படத்தை தயாரித்த தயாரிப்பாளர்கள் பி. நாகி ரெட்டி, சக்ரபாணி ஆகியோருக்கு பெரிய நல்லது செய்தாராம். அது என்னவென்றால், எங்கள் விட்டு பிள்ளை படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆனது.
படம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆன காரணத்தால் தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபம் கிடைத்ததாம். பிறகு பாதி லாபம் கிடைத்திருக்கிறது இதில் 1 பங்கு எம்.ஜி.ஆருக்கு கொடுக்கலாம் என்று திட்டமிட்டு தயாரிப்பாளர்கள் எம்.ஜி.ஆரை சந்தித்து பேசினார்களாம். ஆனால், சம்பளமே போதும் லாபம் எல்லாம் எனக்கு வேண்டாம் என்று எம்.ஜி.ஆர் கூறிவிட்டாராம்.
எம்ஜிஆர் காலத்தில் வெற்றி கொடி நாட்டிய ரஜினிகாந்த்.! ரசிகர் செய்த காரியத்தால் ஷாக்கான சம்பவம்…
இருந்தாலும் தயாரிப்பாளர்கள் விடாமல் வாங்கிக்கொள்ளுங்கள் வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறினார்களாம். பிறகு இறுதியாக நீங்கள் நல்ல விஷயங்கள் செய்து வருவதாக கேள்விப்பட்டேன். அதற்கு நான் கொடுக்கும் பணமாக இதனை வைத்து கொள்ளுங்கள் இதனை வைத்து நல்ல விஷயங்கள் செய்யுங்கள் என்று கூறிவிட்டாராம். இதனை கேட்ட அந்த தயாரிப்பாளர்களும் நெகிழ்ந்து போனார்களாம். இந்த தகவலை பிரபல பத்திரிகையாளரான AVM பிஆர்ஓ துளசி பழனிவேல் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
மேலும், கடந்த 1965ஆம் ஆண்டு வெளியான இந்த எங்க வீட்டுப் பிள்ளை திரைப்படத்தை தபி சாணக்யா இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தில் நடிகர் எம்.ஜி.ஆர் இரண்டு வேடங்களில் நடித்து இருப்பார். படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றது. படத்தில் ஜி. ஆர், நம்பியார், சரோஜா தேவி, கே. ஏ. தங்கவேலு, நாகேஷ் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.