நடிகர் எம்.ஜி.ஆர் உடன் பல நடிகைகள் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் தான் ரசிகர்களின் பேவரைட்டாக இருப்பார்கள். அதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் நடிகை லதாவை கூறலாம். அந்த காலத்தில் எல்லாம் நடிகை லாத எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடிக்கும் படங்கள் எல்லாம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகி இருக்கிறது.
குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் நினைத்ததை முடிப்பவன், உரிமைக்குரல், பல்லாண்டு வாழ்த்து, உலகம் சுற்றும் வாலிபன் படங்கள் எல்லாம் மிகப்பெரிய ஹிட் ஆனது. இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படங்கள் வெறியடைவதன் காரணமாகவே எம்.ஜி. ஆர் அடுத்ததடுத்த படங்களில் லதாவை நடிக்க வைக்க முடிவு செய்து வாய்ப்புகளை கொடுத்தார்.
கொடுத்த வாய்ப்புகளையும் அருமையாக பயன்படுத்திக்கொண்ட லதா நன்றாக நடித்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகையாக வளர்ந்து கொண்டிருந்தார். அது மட்டுமன்றி அந்த சமயம் அவருக்கு தமிழில் மட்டுமில்லாமல் இந்தியிலும் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்ததாம். ஆனால், எம்ஜிஆர் படங்களில் அந்த சமயம் நடிக்க கமிட் ஆகி இருந்த காரணத்தால் வேண்டாம் என மறுத்துவிட்டாராம்.
MGR Nagaril : வயிறு குலுங்க நகைச்சுவை இருந்தும் தோல்வியான ‘எம்ஜிஆர் நகரில்’! காரணம் என்ன தெரியுமா?
அந்த சமயம் இந்தியில் ரிஷி கபூர் மிகவும் பிரபலமான நடிகர் அவருடன் நடிக்கவேண்டும் என்று அந்த சமயம் முன்னணி நடிகையாக இருந்தவர்கள் ஆசைப்பட்டது உண்டு. ஆனால், நடிகை லதாவுக்கு தானே இந்தி படத்தில் ரிஷி கபூருடன் ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்ததாம். ஆனால், அந்த சமயம் தான் லதா எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி இருந்தாராம்.
எனவே எம்.ஜி.ஆர் படம் தான் தனக்கு முக்கியம் என கூறி அந்த இந்தி திரைப்படத்தில் நடிக்கவே மறுத்துவிட்டாராம். அது மட்டுமின்றி சிவாஜி, ரஜினி ஆகியோருடன் படத்தில் நடிக்கவும் அவருக்கு வாய்ப்பு வந்ததாம். அந்த சமயம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்து வந்த காரணத்தால் அவர்களுடன் நடிக்கவும் லதா மறுத்துவிட்டாராம். இந்த தகவலை நடிகை லதா சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…