M.G.Ramachandran : கோவை சரளாவின் சிறிய வயதில் எம்.ஜி.ஆர் அவருக்கு பணம் ரீதியாக பெரிய உதவியை செய்துள்ளார்.
எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்த காலத்தில் எந்த அளவிற்கு உதவிகளை செய்து இருக்கிறார் என்பதனை பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. அவர் செய்த உதவிகளை பற்றி எம்.ஜி.ஆர் இப்போது உயிரோடு இல்லை என்றாலும் கூட கூறி வருகிறார்கள். அப்படி தான் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகையாக இருக்கும் கோவை சரளாவுக்கு கூட சிறிய வயதில் எம்.ஜி.ஆர் பணம் ரீதியாக உதவி செய்துள்ளாராம்.
கோவை சரளா நடிக்க வருவதற்கு முன்பு படிப்பில் ரொம்பவே ஆர்வம் காட்டினாராம். அந்த சமயம் இருந்தே நடிகை கோவை சரளா எம்.ஜி.ஆருடைய தீவிர ரசிகையாக இருந்து வருகிறாராம். கோவை சரளாவுக்கு சொந்த ஊர் கோவை எனவே ஒரு முறை கோவைக்கு எம்.ஜி.ஆர் வந்த போது அவரை பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்துடன் கோவை சரளா சென்ரறாராம்.
அப்போது பெரிய பிரபலம் ஒருவர் எம்.ஜி.ஆரிடம் நடிகை கோவை சரளாவை அறிமுகம் செய்து வைத்தாராம். அவரை பார்த்தவுடன் எம்.ஜி.ஆர் உனக்கு நல்ல நிறையவே திறமை இருக்கிறது என்பது போல கூறினாராம். பிறகு அவருடைய கல்வி செலவுக்காக எம்.ஜி.ஆர் கட்டு கட்டாக பணம் எடுத்து கொடுத்து பெரிய உதவியை செய்தாராம்.
எம்.ஜி.ஆர் கொடுத்த அந்த பணத்தில் தான் நடிகை கோவை சரளாவும் படித்தாராம். எம்.ஜி.ஆர் தனக்கு உதவி செய்தது போல நாமளும் பெரிய ஆளாக வளர்ந்து உதவி செய்யவேண்டும் என்றும் கோவை சரளா அப்போதே நினைத்தாராம். அதைப்போல படப்பிடிப்பு முடிந்த பிறகு கோவை சரளா நடிக்க ஆசைப்பட்டு நடிக்க வாய்ப்பு தேடி அழைந்தாராம்.
பிறகு தான் அவருக்கு சினிமாவில் முந்தானை முடிச்சி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அவருக்கு அடுத்ததாக படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்க சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்தாராம். முன்னணி நடிகையாக வளர்ந்த பிறகு எம்.ஜி.ஆர் தனக்கு செய்த உதவியை போல பல குழந்தைகளுடைய கல்வி செலவுக்கு பணம் கொடுத்ததும் உதவி செய்து வருகிறாராம்.
கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…
டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…
சென்னை : இன்றயை காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. இதில் பொழுதுபோக்குக்காகவும், சில முக்கிய…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…
டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே உள்ளஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான…
சென்னை : அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும்…