M.G.Ramachandran : ஓடாத பாரதி ராஜா படத்தை ஓட வைக்கும் வகையில் எம்ஜிஆர் விஷயம் ஒன்றை செய்துள்ளார்.
எம்.ஜி.ஆர் தன்னுடைய படங்கள் மட்டுமின்றி மற்ற நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் படங்களும் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் ஆகவேண்டும் என்று விரும்பும் ஒரு நல்ல மனம் கொண்டவர். அவர் திரைப்படங்களில் நடித்து கொண்டு இருந்த காலத்தில் கூட மற்ற படங்களும் வெற்றிபெறவேண்டும் என்று விரும்புவார் என பல தயாரிப்பாளர்களும் அவருடன் படங்களில் நடித்த பிரபலங்களும் பெருமையாக பேசுவது உண்டு.
அந்த வகையில், பாரதி ராஜா இயக்கிய புதுமை பெண் படம் வெளியான சமயத்தில் சரியான விமர்சனத்தை பெறவில்லை என்பதால் பாரதி ராஜாவும் படத்தின் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் ஆகியோர் வேதனையில் இருந்தபோது எம்.ஜி.ஆர் பெரிய விஷயம் செய்து படத்தை ஓட வைத்து கொடுத்துள்ளார். பாரதி ராஜா புதுமைப்பெண் படத்தை பெரிய பட்ஜெட்டில் உருவாக்கி ரீலிஸ் செய்தார்.
ஆனால், படம் வெளியான சமயத்தில் எதிர்பார்த்த அளவிற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வரவில்லை எனவே, பாரதி ராஜா ரொம்பவே வேதனைப்பட்டாராம். பிறகு தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் எம்.ஜி.ஆரை நேரில் சந்திக்கலாமா? என்று பாரதி ராஜாவிடம் கேட்டாராம். அதற்கு பாரதி ராஜாவும் சம்மதம் தெரிவிக்க ஏவிஎம் சரவணன் எப்படியோ பேசி எம்ஜிஆர் அலுவலகத்திற்கு சென்றுவிட்டார்களாம்.
அங்கு சென்றவுடன் எம்.ஜி.ஆர் என்ன விஷயம் என்று கேட்டாராம். அதற்கு ஏவிஎம் சரவணன் பாரதி ராஜா இயக்கத்தில் வெளியான புதுமைப்பெண் படம் சரியாக போகவில்லை வேதனையாக இருந்தது உங்களை பார்த்தால் கொஞ்சம் மனது சந்தோசமாக இருக்கும் என்று உங்களை பார்க்க வந்தோம் என்று கூறினார்களாம்.
உடனடியாக எம்.ஜி.ஆர் தனக்கு நெருக்கமானவர்கள் சிலருக்கு போன் செய்து படத்தின் டிக்கெட் வரி விலக்கை நீக்குங்கள் என கூறி நான் சொன்னதாக இதனை எல்லா தியேட்டருக்கு அனுப்புங்கள் என்பது போல கூறினாராம். அப்படி செய்த பிறகு படம் பார்க்க பலரும் வருகை தந்த நிலையில், படம் மிகவும் அருமையாக இருந்த காரணத்தால் படம் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆனது. எம்ஜிஆர் அப்படி செய்த காரணத்தால் தான் படம் மதுரையில் மட்டுமே 200 நாட்கள் ஓடியது என்றும் ஏவிஎம் சரவணன் தெரிவித்துள்ளார்.
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 அதிகரித்து விற்பனையான நிலையில், பொங்கல் பண்டிகையான…