ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வெற்றியை பெற்று வரும் நிலையில், சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு பெங்களூருவில் தான் பணியாற்றிய ஜெயநகரா பேருந்து பணிமனைக்கு சென்று தற்போதுள்ள ஓட்டுநர், நடத்துநர்களை சந்தித்து அவர்களுடைய நலம் பற்றி விசாரித்தார்.
பிறகு அங்கிருந்தவர்களுடன் புகைப்படங்களை எடுத்துக்கொண்டு நடத்துனராக இருந்த நாட்களை மீண்டும் நினைவுகூர்ந்தார். ரஜினி அங்கு வந்ததை பார்த்த ரசிகர்கள் மற்றும் காவலர்கள் ரஜினியுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். பிறகு ஓட்டுநர், நடத்துநர்களுக்கு நடுவில் அமர்ந்து கொண்டு ரஜினி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், அதனை பார்த்த ரஜினி ரசிகர்கள் நியாபகம் வருதே! எனவும் பழசை மறக்காத சூப்பர் ஸ்டார் எனவும் கூறி வருகிறார்கள். ரஜினி சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு பேருந்து நடத்துனராக தான் இருந்தார் அதன் பிறகு சினிமாவில் நடித்து தற்போது சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீஹரிகோட்டா : விண்ணில் 2 செயற்கைகோள்களை இணைத்து அதன் மூலம் 2 செயற்கைகோள்களுக்கு இடையே எரிபொருள் அல்லது வேறு பொருட்கள்…
ராஜ்கோட்: மகளிருக்கான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தொடரை…
மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை வீடு புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ராவில்…
மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும்…
மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…
இஸ்ரேல்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடந்துவந்த போர்…