நியாபகம் வருதே! தான் பணியாற்றிய போக்குவரத்து கழகத்தின் டிப்போவுக்கு சென்ற ரஜினிகாந்த்!

Rajinikanth Bengaluru

ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வெற்றியை பெற்று வரும் நிலையில், சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு  பெங்களூருவில் தான் பணியாற்றிய ஜெயநகரா பேருந்து பணிமனைக்கு சென்று தற்போதுள்ள ஓட்டுநர், நடத்துநர்களை சந்தித்து அவர்களுடைய நலம் பற்றி விசாரித்தார்.

பிறகு அங்கிருந்தவர்களுடன் புகைப்படங்களை எடுத்துக்கொண்டு நடத்துனராக இருந்த நாட்களை மீண்டும் நினைவுகூர்ந்தார். ரஜினி அங்கு வந்ததை பார்த்த ரசிகர்கள் மற்றும் காவலர்கள் ரஜினியுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். பிறகு ஓட்டுநர், நடத்துநர்களுக்கு நடுவில் அமர்ந்து கொண்டு ரஜினி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், அதனை பார்த்த ரஜினி ரசிகர்கள் நியாபகம் வருதே! எனவும் பழசை மறக்காத சூப்பர் ஸ்டார் எனவும் கூறி வருகிறார்கள்.  ரஜினி சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு பேருந்து நடத்துனராக தான் இருந்தார் அதன் பிறகு சினிமாவில் நடித்து தற்போது சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்