உருகவைக்கும் மெலடி… பொன்னியின் செல்வன் 2 படத்தின் “அகநக” பாடல் வெளியீடு.!
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வரும் ஏப்ரல் 28, 2023 அன்று திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக படத்தின் முதல் பாடலான அகநக எனும் பாடல் இன்று வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
The song that left you wanting more is out now
Listen to #AgaNaga #RuaaRuaa #Aaganandhe #Akamalar & #Kirunage▶️ https://t.co/QzCawMHQKw#PS2 #PonniyinSelvan2 #ManiRatnam @arrahman @madrastalkies_ @LycaProductions @Tipsofficial @IMAX @primevideoIN @Karthi_Offl @trishtrashers pic.twitter.com/IG4JnNEm6l
— Lyca Productions (@LycaProductions) March 20, 2023
அதன்படி, தற்போது பாடல் வெளியாகியுள்ளது. பாடலில் வரும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை மனதை உருகும் வகையில் இருக்கிறது. எனவே, இந்த மெலடி பாடலும் பெரிய ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த பாடலை தொடர்ந்து பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை வெளியீட்டு மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா வருகின்ற ஏப்ரல் 4- ஆம் தேதி நேரு மைதானத்தில் வைத்து மிகவும் பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.