உறவுகளை நினைவூட்டும் “மெய்யழகன்” ட்விட்டர் விமர்சனம்.! குடும்பங்களை கவர்ந்தாரா கார்த்தி?

குடும்பங்களை கவரும் பீல் குட் மூவியாக மெய்யழகன்" திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி பாஸிட்டிவ் விமர்சனங்களுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

meiyazhagan twitter review_11zon

சென்னை : நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த் சுவாமி நடித்த “மெய்யழகன்” திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இன்று (செப்டம்பர் 27)  வெளியாகி திரையரங்குகளில் பாஸிட்டிவ் விமர்சனங்களுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

96 பட இயக்குநர் பிரேம்குமார் இயக்கிய இந்த திரைப்படம் அதன் கதை மற்றும் நடிகர்கள் நடிப்பிற்காக பாராட்டப்பட்டது. படத்தில் ராஜ் கிரண், ஸ்ரீ திவ்யா, தேவதர்ஷினி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மெய்யழகன் திரைக்கதை

கிராமத்தில் வாழ்ந்த உடன்பிறந்த சொந்தங்களால் சொத்து தகராறால் பாரம்பரிய வீட்டையும், சொத்துகளையும் இழந்து, தஞ்சை பகுதியை விட்டு சென்னைக்கு செல்கிறது அரவிந்த்சாமியின் குடும்பம்.

இருபது வருடங்களுக்கு பிறகு, சித்தி மகள் திருமணத்தில் பங்கேற்பதற்காக அரவிந்த்சாமி தனியாக அதே கிராமத்துக்கு செல்கிறார். அங்கு அரவிந்தசாமியை கார்த்தி ‘அத்தான்’ என்று உறவு கொண்டாடி பாசத்தை கொட்டுகிறார்.

கார்த்தியை அடையாளம் தெரியாமல் அரவிந்தசாமி குழம்புகிறார். தன்னைக் கொண்டாடி மகிழும் உறவினர் கார்த்தியுடன், ஒருநாள் இரவு முழுக்க அரவிந்த்சாமி பேசிப் பழகும் சந்தர்ப்பம் ஏற்படுகிறது.

கடைசிவரை கார்த்தியின் பெயரையும், அவர் யார் என்பதையும் தெரிந்துகொள்ள விரும்பாத அரவிந்த்சாமி, கார்த்தியிடம் சொல்லாமலேயே சென்னைக்கு திரும்புகிறார். இதனால், கார்த்தியின் பெயர் கூட தெரியாமல் இருக்கிறோமே என்ற குற்ற உணர்ச்சியில் தவிக்கிறார் அரவிந்த்சாமி. கடைசியில் அவரது மன உளைச்சல் தீர்ந்ததா? கார்த்தி யார் என்பதே மீதி கதை.

படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள் என்றும் அவர்களது டிவிட்டர் விமர்சனம் குறித்து பார்க்கலாம்.

அடுத்த ஒருவர், “தமிழ் சினிமாவில் இப்டியொரு மனதை வருடும் படத்தை பார்த்து நாட்களாகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒருவர், ‘படத்தின் முதல் பாதி கவிதையா போய்ட்டு இருக்கு” என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொருவர், “ரொம்ப எதார்த்தமான, அழகான எமோஷனலான முதல் பாதி இரண்டு பேரும் நடிச்ச மாதிரியே தெரியல” என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்னொருவர், “நம் குடும்பம், நினைவுகளை உணர்வுப்பூர்வமாக பதிவு செய்திருக்கும் மெய்யழகன் படத்தில் கார்த்தி, அரவிந்த் சாமியின் அற்புதமான நடிப்புகள் ரசிகர்களின் மனதை கவர்ந்துவிடும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MK Stalin - TN Rain
06.11.2024 Power Cut Details
VCK Leader Thirumavalavan - Tamilnadu CM MK Stalin
yellow alert rain
VCK Leader Thirumavalavan - TVK Leader Vijay
Sunil Gavaskar
Bengaluru