தனுஷ் நடிப்பில் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியான “வாத்தி” திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று இன்னும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.
இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை சாமியுக்தா மேனன் நடித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது வாத்தி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் இம்மாதம் 17ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது. இதனால் திரையரங்குகளில் படம் பார்க்காத ரசிகர்கள் அனைவரும் ஓடிடியில் படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர்.
மேலும் வாத்தி திரைப்படம் உலகம் முழுவதும் 100 கோடி களுக்கு மேல் வசூல் செய்திருந்தது. எனவே, இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தனுஷ் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தனுஷ் இயக்கி இருக்கும் "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் " திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி…
டெல்லி : 2025- 26 ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது தொடங்கி எப்போது முடியும் என்கிற தகவல் தற்போது…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் இளம் வீரரான (27) ரிங்கு சிங் விரைவில் திருமணம் செய்துகொண்டு…
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில்…
சென்னை : இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த திருமால்பூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள்…
மும்பை : ஆஸ்ரேலியாவுக்கு எதிராக நடந்து முடிந்த பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய அணி தோல்வியடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில்…