தமிழில் மெகாஹிட்…இந்தியில் ரீமேக் ஆகும் ‘லவ் டுடே’.!
இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் அவருடன் இவானா, ரவீனா ரவி, ராதிகா சரத்குமார், ஆதித்யா கதிர், அஜீத் காலிக், யோகி பாபு, சத்யராஜ், பிராத்தனா நாதன் உள்ளிட்டோர் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.இன்றயை காலகட்டத்தில் இருக்கும் காதலை மையமாக வைத்து காமெடிகளை சேர்த்து எடுத்திருந்தால் படம் பலருக்கும் பிடித்தது என்றே கூறலாம்.
தமிழில் இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இந்தியில் படம் ரீமேக் ஆகவுள்ளது. படத்தின் இந்தி ரீ மேக் உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான Phantom Studios நிறுவனம் வாங்கியுள்ளதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். விரைவில் படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள், நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Super happy to announce the Hindi Remake of #LoveToday in association with Phantom Films @FuhSePhantom @shrishtiarya Can’t wait to take this film to a larger audience with a super interesting cast and crew ❤️ @pradeeponelife @Ags_production @aishkalpathi
— Archana Kalpathi (@archanakalpathi) February 20, 2023
மேலும் லவ் டுடே திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிக்பெரிய வெற்றியை பெற்றது. கிட்டத்தட்ட 100 நாட்கள் படம் திரையரங்குகளில் ஓடியது என்றே கூறலாம். வசூல் ரீதியாக 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 90 கோடி வரை வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.