100 நாட்களை கடந்த ‘லவ் டுடே’.! இரண்டு மெகாஹிட் படங்களை கொடுத்த பிரதீப் ரங்கநாதன்.!
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் வெளியாகி இன்றுடன் 100 நாட்களை கடந்து சென்னையில் சில திரையரங்கிகளில் ஓடிகொண்டிருக்கிறது.
லவ் டுடே
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் இவானா, ரவீனா ரவி, ராதிகா சரத்குமார், ஆதித்யா கதிர், அஜீத் காலிக், யோகி பாபு, சத்யராஜ், பிராத்தனா நாதன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘லவ் டுடே’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
இன்றயை காலகட்டத்தில் இருக்கும் காதலை மையமாக வைத்து காமெடிகளை சேர்த்து எடுத்திருந்தால் படம் பலருக்கும் பிடித்தது என்றே கூறலாம். வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
100 நாட்களை கடந்த லவ் டுடே
கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான லவ் டுடே திரைப்படம் வெளியாகி இன்றுடன் 100 நாட்கள் ஆகியுள்ளது. ஆம் சென்னையில் உள்ள சில திரையரங்குகளில் லவ் டுடே திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
#LoveToday completes 100 days of theatrical run A huge victory only possible because of all the love we got from all of you ❤️ Thank u for standing with us, rooting for us and making this film a cult classic #100daysLoveToday @pradeeponelife @i__ivana_ @thisisysr @aishkalpathi
— Archana Kalpathi (@archanakalpathi) February 11, 2023
படம் 100 நாட்களை கடந்தையடுத்து படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ட்வீட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அதில் ” லவ் டுடே 100 நாட்கள் திரையரங்குகளை நிறைவு செய்கிறது உங்கள் அனைவரின் அன்பினால் மட்டுமே ஒரு மாபெரும் வெற்றி சாத்தியம், எங்களுடன் நின்று, எங்களுக்காக வேரூன்றி, இந்தப் படத்தை ஒரு கல்ட் கிளாசிக் ஆக்கியதற்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.
தொடர்ச்சியாக இரண்டு பிளாக்பஸ்டர்
இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய கோமாளி திரைப்படமும் 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடியது. அதைப்போல அடுத்ததாக தற்போது லவ் டுடே திரைப்படமும் 100 நாட்களை கடந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. தொடர்ச்சியாக இரண்டு பெரிய பிளாக் பஸ்டர் படங்களை கொடுத்த பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக யாரை வைத்து படம் இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகமாகியுள்ளது.