மீடூ விவகாரத்தை விளம்பரத்துக்கு பயப்படுத்தலாம்…பட்டென்று போட்டுடைத்த நடிகை…!!!
நடிகையும் பிக்பாஸில் புகழ்பெற்றவருமான ஜனனி ஐயர் மீடூவை விளம்பரத்துக்கு பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளார்.
நடிகை ஜனனி சேலத்தில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு மற்றும் இருசக்கர வாகனப் பேரணி நடந்தது.இந்த பேரணியை மாநகரக் காவல் ஆணையாளர் சங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்த விழிப்புணர்வு பேரணியில் நகைச்சுவை நடிகர் தாடிபாலாஜி, நடிகை ஜனனி இருவரும் அவர்களுடன் சுமார் 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஹெல்மெட் அணிந்த படியே இருசக்கர வாகனத்தை ஓட்டிப் பொதுமக்களுக்கு ஹெல்மட் அணிவதின் அவசியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சில் கலந்து கொண்ட நடிகை ஜன்னயிடம் தமிழகத்தில் நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்படுத்தி வரும் மீடூ விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.அதற்கு பதிலளித்த நடிகை ஜனனி மீடூ விவகாரத்தைத் தவறாக செய்தி மற்றும் விளம்பரத்துக்காக பயன்படுத்தாமல் நல்ல விஷயத்துக்காக பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்.சினிமா துறையில் மட்டுமில்லாமல் எல்லாத் துறைகளிலும் பெண்களுக்குப் பாலியல் தொந்தரவுகள் உள்ளன.
பாலியல் தொல்லைக்கு ஆளான நிறைய பெண்கள் அவர்களுக்கு நடக்கும் பிரச்சினைகளை வெளியில் சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும்.மீடுவால் சினிமா துறையில்பாதிக்கப்படுவது வெளிப்படையாகத் தெரிகிறது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் காலம் கடத்தாமல் உடனே தெரிவிக்க வேண்டும். அப்படி உடனடியாக வெளியே சொல்வதால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதை முற்றிலுமாக தவிர்க்க முடியும் என்று கூறினார்.
DINASUVADU