மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் சிம்புவின் பிரச்சனை…!!!
நடிகர் சிம்பு மணிரத்தினம் இயக்கிய செக்க சிவந்த வானம் படத்தில் நடித்துள்ளார். இதனையடுத்து சிம்பு சுந்தர்.சி இயக்கம் படத்தில் இணைந்துள்ளார்.
இதன் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் தொடங்கவுள்ளதாம். ஏற்கனவே சிம்பு நடிப்பில் வெளியான AAA படம் சர்ச்சைக்குள்ளானது. இப்படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சிம்பு மீதுதயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். சிம்புவாள் தனக்கு ரூ.20 கோடி நஷ்டமானது என கூறியிருந்தார்.
மேலும் 60 நாட்கள் மட்டுமே நடித்துக்கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் மைக்கேல் மறுபடியும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இதில் என் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காமல் சிம்பு இந்தப் படத்திலும் நடிக்கக் கூடாது. சுந்தர்.சி படத்தில் அவர் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது.
என்னுடைய நஷ்டத்தை சிம்பு சரிசெய்ய வேண்டும். தயாரிப்பாளர் சங்கத்தை நம்பியுள்ளேன். அவர்கள் தான் பணத்தை பெற்று தர வேண்டும்.